கண்விழித்து பார்த்த போது சுவற்றில் சாய்ந்து ஒரு கையால் அவள் தலையை கோதிவிட்டவாறே உறங்கிக் கொண்டிருந்தான். மணி 3 நெருங்கி இருந்தது. உறக்கத்தில் கூட தலையை கோதிக் கொண்டிருக்கிறாரே? நான் தூங்கிய பிறகு இவர் நன்றாக படுத்து உறங்காமல்... கேட்டால் காதல் என்பார்... என்று சளித்துக் கொண்டே அவனருகில் அமர்ந்து அவனது தலையை அவள் தோள் மீது சாய்த்துக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.
விடியற்காலை... தன் கன்னத்தில் ஏதோ இருப்பதை மெல்ல உணர்ந்து கண் திறந்தான். பக்கத்தில் மதுராவைப் பார்த்து இவள் எப்போது எழுந்தாள் என்று யோசித்தான். அவள் கைதான் அவன் கன்னத்தில் பதிந்திருந்தது.
மது எப்போது எழுந்தாள்? நான் இவள் தோழில் சாய்ந்திருக்கின்றேன்!! வலித்திருக்குமே.... எழுப்பியிருந்தால் அல்லது தலையணையை வைத்திருந்தால் என்ன...? கேட்டால், நீங்கள் மட்டும் எனக்காக எதையும் செய்யும்போது நான் செய்யக் கூடாதா என்பாள்.. என்றவாறே அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு அவளை தன் தோளில் தாங்கினான்.
மதி வந்து கதவினைத் தட்டி, மதுரா.... திருமணத்திற்கு பிறகும் மாறாமல் ஏழு மணி வரை தூங்குகிறாயா... என்றாள். டீ எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன்...
கதவினைத் திறந்து வெளிவந்தது க்ரித்திக் தான். மதி, மது தூங்குகிறாள் ப்ளீஸ் மெதுவாகப் பேசுங்களேன்...
க்ரித்திக் திஸ் ஈஸ் டூ மச்.... நீங்க கொடுக்குற இடம்தான்... இப்பவும் தூங்கிக் கொண்டே இருக்கிறாள்.
விடுங்க மதி.... அவள் அம்மா வீட்டில் தானே தூங்குகிறாள்? தூங்கட்டுமே... எங்கள் வீட்டில் சீக்கிரம் எழுந்துவிடுவாள்.
அதுசரி.... சப்போர்டா?? நான் ஒன்றும் சொல்லவில்லை. நீங்க அவள் எழுந்ததும் கீழே வரச் சொல்லுங்கள் நான் செல்கிறேன்.
மெதுவாக மதுராவின் அருகில் அமர்ந்து அவளைப் பார்த்தான். ஏழு மாதம் ஆகிவிட்ட அவளது வயிறு அவளை திரும்பி படுக்கவிடாமல் தடுத்தது. தூக்கத்தில் கூட கவனமாய் புரண்டு படுத்தாள். நம் குழந்தையை மிகக் கவனமாய் பார்த்துக் கொள்வேன் என்று அவள் கூறியது நினைவு வந்தது. இன்னும் இரண்டு மாதங்களில் குழந்தை நம் கைகளில் என்று யோசிக்கும் போதே அவனுக்குள் இனம் புரியாத பயமும் உருவாகிற்று. வலி.... அந்த வலியினை என் மது எவ்வாறு தாங்குவாள்? அவளை நான் எவ்வாறு அந்த வலியில் தவிக்கவிடுவது. ஒருமுறை இவள் மயங்கி விழுந்ததே என் மூச்சு நின்றுவிட்டதை போல் இருந்ததே... கடவுளே... வலியை மட்டும் எனக்கு கொடுத்துவிடக் கூடாதா??
உறக்கம் கலைந்து விழித்தவள் க்ரித்திக்கை பார்த்து திடுக்கிட்டாள். என்னங்க.. என்னாச்சு ஏன் உங்க முகம் ஒரு மாதிரியா இருக்கு?
ஒன்றுமில்லை மது... சும்மாதான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
பொய் சொல்லாதீங்க.. உங்களைப் பற்றி எனக்கு தெரியாதா? கூறுங்கள் என்ன யோசித்தீர்கள்?
அதுவா... இரண்டு மாதத்திற்கு பிறகு நடக்கப் போவதைத்தான் யோசித்தேன்.
இரண்டு மாதத்திற்கு பிறகா? என்ன நடக்கும்..!!
என்னால் உனக்கு எவ்வளவு கஷ்டம்.... ஒரே நேரத்தில் 600 எலும்புகள் உடையும் வலியை நீ அனுபவிப்பாயே..? என் ஆண்மையை நிரூபிக்க நீ அல்லவா உன் உயிருடன் போராடுகிறாய்?
என்ன உளறுறீங்க.... தாய்மை என்பது கடவுள் கொடுக்கும் வரம். எனில் எனக்கு அதை பரிசளித்த நீங்கள் என் கடவுள் அல்லவா? உங்கள் ஆண்மையையோ அல்லது என் பெண்மையையோ நிரூபிக்க இந்த குழந்தை உருவாகவில்லை. நம் காதலின் அடையாளமாக மட்டுமே நம் குழந்தை. நம் குழந்தையை சுமப்பதிலோ அல்லது பெற்றெடுப்பதிலோ எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. அத்தோடு அறுநூறு எலும்புகள் இல்லை ஆராயிரம் எலும்புகள் உடைந்தாலும் என்னை ஒன்றும் செய்யாது உங்கள் கண்ணில் வலி தெரியும் வரை....
இல்லை மது... நான் நிச்சயம் உனக்கு வலி ஏற்படுத்த மாட்டேன். தைரியமாக இருப்பேன்.
ம் தட்ஸ் குட்.... மை க்யூட் ஹப்பி....சரி நான் சென்று குளித்துவிட்டு வருகிறேன்.
ஓகேமா.... மதி வேற முன்னாடியே வந்துட்டு போனாங்க...
அய்யோ.... அவ இன்னேரம் அம்மாவிடம் கம்பிளெய்ன் பண்ணிருப்பாளே.... ஏங்க எழுப்பாமல் விட்டீங்க...
நீ தூங்கும் பொழுது நானும் உன்னை எழுப்ப மாட்டேன். மற்றவர்களையும் எழுப்ப விட மாட்டேன்.
ஏனாம்....?
ஏன்னா.... என் பொண்டாட்டிய யாரும் டிஸ்டர்ப் பண்ண கூடாது...
ம்... சரி ஆனால் இப்போ கீழ போயி அர்ச்சனை வாங்க வேண்டுமே..?ஹா..ஹாஹா...
சிரிக்காதீங்க.. சீக்கிரமா கீழ போகனும் இல்லைனா அவ்வளவு தான்.
நான் வேண்டுமானால் உதவி செய்யட்டுமா என்றான் சிரித்துக் கொண்டே...
என்ன.... என்றால் மிரட்டலாய்.
ஒன்னுமில்லை சும்மா... சும்மா.....
ம் அந்த பயம் இருக்கட்டும் என்றுவிட்டு தனியே சிரித்தாள்.
YOU ARE READING
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
Romanceமதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....