காதல்-1

10.2K 145 339
                                    

காலை மேகங்கள் படர்ந்திருக்க.... கிழக்கில் தன் பணியை தொடங்க ஆதவன் எழ.... பறபறப்பாய் தொடங்கியது அன்றைய நாள்.... சாலைப்புறம் வண்டிகள் நெரிசலில் விடாமல் ஒலியூட்டி அலுத்துப் போய் ஓய்ந்து கிடக்க.... சென்னை மாநகருக்கு ஏற்ற பரபரப்பு அனைவருக்கும் பொருந்தி இருந்தாளும்... பரபரப்பே இல்லாமல் சென்னை விமானநிலையத்தில் அரைமணி நேரம் தாமதமாகி வந்திறங்கியது லண்டனில் இருந்த புறப்பட்ட ஒரு விமானம்.... பயணிப்போரின் உறவினர்கள் பதட்டத்தோடு காத்திருக்க.... தவிப்பே இல்லாமல் அமைதியாய் வெளி வந்தனர் அனைவரும்... ஏதோ ஒரு வித எதிர்பார்ப்புடன் ஒரு பலகையுடன் நின்றார் ஒரு மதிலுந்தின் ஓட்டுனர்.... ஒரு மணி நேரம் அடந்தும் அவர் எதிர்பார்த்தவர்கள் வராமல் போக..... பதறிப்போனவர் அவரின் காரில் ஏற சென்னை செல்வந்தர்கள் வசிக்கும் பறந்து விரிந்த "தென்றல் நகர்" இல் போய் நின்றது அவரின் கார்...

வெள்ளை கட்டிடத்தில் சிகப்பு நிற பூக்கள் பூத்து பச்சை நிற கோடுகளுடன் ஆடம்பரமில்லா அழகுடன் மிளிர்ந்தது அவ்வீடு... உள் நுழைந்தவர் பரபரப்பில்லாமல் பேப்பர் வாசித்துக் கொண்டிருந்தவர் அருகில் சென்று " சார் சார் " என அழைக்க... பேப்பரிலிருந்து தன் பார்வை மேல் நோக்கி உயர்த்தினார் மாதவன்.....

விமான நிலையத்திலிருந்து அவர்கள் வரவில்லை என அவர் கூற.... அவர் கூறியதை கேட்டு அலட்டிக்கொள்ளாமல் "சரி வேலையை போய் பாரு " என கூறிவிட்டு உள் சென்றார்....
.
.
.
கடிகாரம் பதினைந்தாவது முறையாய் அலரிவிட்டு ஓய.... அதனை தட்டிவிட்டு போர்வைக்குள் தன்னை பதுக்கிக் கொண்டது ஒரு உருவம்.... சில மணி துளிகளிள்.... அதிவேகமாய் அவ்வறையின் கதவு திறக்கப்பட....படாரென கேட்ட சத்தத்திலும் அவர்கள் அதே போல் இருக்க.... காட்டன் சேலையில் கொண்டையிட்ட தலை முடியுடன் கையில் குச்சியுடன் உள்ளே நுழைந்தார் இலக்கியா..... அவர் அருகில் சென்று... எழுந்துக்கப் போரீங்களா இல்லையா???? என கத்த.... டூ மினிட்ஸ் என இரு கைகள் வெளியேற.... 5 மினிட்ஸ் என ஒரு கை வர.... அம்மூன்று கைகளையும் பிடித்து இழுத்துவர்....அம்மூவரையும் அமர வைக்க.... மீண்டும் சரிய போனவர்களின் மண்டையிலே அக்குச்சியை வைத்து தட்ட... அம்மா என கத்திக் கொண்டே படாரென எழுந்தனர் இலக்கியாவின் புதழ்விகள் அனுராதா, திவ்யஹரினி, தேவிப்ரியா....

மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)Where stories live. Discover now