கந்தர்வமலையின் அடிவாரத்தில்....
விகாஷ் : அஞ்சி ஓட வேண்டிய நிலமை வந்துவிட்டதே... என ஆத்திரத்தில் கண்டதையும் தூக்கி போட்டு உடைக்க....
யோகனா : சினம் வேண்டாம் பிரபு... தற்போது நாம் வந்து தான் ஆக வேண்டும்... ஏனெனில் தங்கள் சகோதரர் ஆகாஷ்வரன் உயிர் நீக்கும் நிலைக்கு சென்று விட்டார்... அவரை பிழைக்க வைக்க வேண்டுமல்லவா....
மேகலாயா : இவ்வனைத்தும் அந்த அடங்காதவளால் வந்தது... அவள் மாத்திரம் கோவன்களின் கை கட்டை அவள் மந்திரம் கொண்டு உடைக்காமல் இருந்திருந்தால் இந்நொடி நிச்சயம் அவர்களை பலி கொடுத்திருக்கலாம்... என வலியில் முனகிக் கொண்டே ஆவேசத்தை வெளிகாட்டினாள்....
தீரா : அப்டின்னு நெனக்கிற.... நெனப்பு தான் பொலப்ப கெடுக்குமாம்... சொன்னாங்க....
மதுசூதனா : என்ன செய்வது... நம்மால் அவளை ஒன்றும் செய்ய இயலாதே.... அவளை ஏதேனும் செய்தால் நாம் இருவருமல்லவா உயிரை நீக்க வேண்டும்....
விகாஷ் : அவர்களை இங்கு இழுத்து வாருங்கள்... என கத்த.... யோகனாவின் மாயக்கட்டிற்குள் சிக்கி தவித்த மாயா மோகினி மற்றும் துருவன் அங்கே இழுத்து வரப்பட்டனர்.... மாய கட்டை நீக்கிய யோகனா குரோதமாய் முறைத்தாள்... மாயாவின் அருகில் நெருங்கிய விகாஷ் அவளை ஓங்கி அறைந்தான்... அதிர்ந்த மாயா பதிலடிக் கொடுக்கும் முன்னே... விகாஷ்ஷின் கன்னம் பழுத்திருந்தது மோகினி விட்ட அறையில்.... அனைவரும் பேரதிர்ச்சியில் அவளை நோக்க.... காளியாய் நின்றிருந்தாள் மோகினி....
மோகினி : எந்த உரிமையை வைத்துக் கொண்டடா அவளை அறைந்தாய்...
விகாஷ் : எவ்வுரிமை வேண்டுமெமக்கு... யான் அவளின் கணவன்....
மோகினி : இல்லாத காரணத்தை ஞாயமாக்க பார்க்காதே மதி கெட்டவனே.... அது சென்ற பிறவி... அதிலும் வெறும்... வெறும் எட்டு மாதங்கள் நீ கூறிய பொய்யை நம்பி நீ கணவனென நினைத்தோமே ஒழிய... உன்னை கணவனென என்றுமே நினைத்ததில்லையடா... என கத்த....
DU LIEST GERADE
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)
Fantasyஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கி...