காதல் -45

694 35 13
                                    

அரண்மனையை விட்டு விரைவாய் வெளியேறிய இந்து ஆருத்ரா அருந்ததி மூவரும் நின்றிருந்த ரதம் ஒன்றை எடுத்துக் கொண்டு.... காட்டின் புறம் விரைந்தனர்.... விரைந்தோடிய புறவி காட்டிற்குள் ஒரு குறிப்பிட்ட எல்லையில் நின்று விட... ரதத்தை அங்கே இருக்குமாறு செய்து விட்டு... மூவரும் காட்டிற்குள் நுழைந்து.... அடி அடியாய் தொங்கிக் கொண்டிருந்த கொடிகளை நகர்த்திவிட்டு உள் நுழைய.... அவர்களை வரவேற்த்ததோ அம்மாபெரும் நீர்வீழ்ச்சி... அழகான வனம்.... பச்சை போர்வை போர்த்திய நிலம்.... விதவிதமான அழகிய மலர்கள்... எரிந்த சந்தனக்கட்டையின் கசந்த மணம்.... நீர்வீழ்ச்சியின் நீர் படபடவென பாரையில் கொட்டும் போது வெளிவரும் பலமான சத்தமென அவ்விடமே அழகுடன் நிறைந்திருக்க.... மூவரும் அவரவர் விழிகளை சுழல விட.... அவர்கள் நினைத்ததை போலவே அவர்களின் விழிகள் தேடியவர்கள் அங்கு தான் இருந்தனர்....

வேக எட்டுக்களுடன் சென்று நீர்வீழ்ச்சியில் காலை நனைத்து மாற்றி மாற்றி விளையாடிக் கொண்டிருந்த இளவரசிகள் மூவரின் தலையிலே மூவரும் நங்கென கொட்ட... மூவரும் ஒரே நேரத்தில் ம்மா... என கத்தினர்....

ஆருத்ரா : என்ன செய்கிறீர்கள் மூவரும்.... சண்டையை முடித்தால் அரண்மனைக்கு வர வேண்டுமென எத்துனை முறை கூறுவது மூவருக்கும்....

ஸ்ரீ : சினம் வேண்டாம் ஆரு... சற்று மனமார இருக்க விரும்பினோம்... ஆதலாலே இங்கு வந்தோம்....

அருந்ததி : அதெல்லாம் சரி தான்... மனமார வேண்டுமென இங்கு வந்தீர்கள் சரி... ஏன் எங்களிடம் தெரிவிக்காமல் விட்டுவிட்டு வந்தீர்கள்....

தாரிணி : எப்படியும் தாங்கள் மூவரும் இங்கு தேடி வருவீர்கள் என்ற நம்பிக்கையில் தான்... என்றாள் கண்ணடித்து....

இந்து : யான் எவ்வளவு அச்சத்தில் மூழ்கி விட்டேன் தெரியுமா....

ஆதன்யா : ஏன் இந்து... உன் தோழிகள் யாரென மறந்துவிட்டாயா.... எவ்வித ஆபத்தாயினும் எங்களை நெருங்காது... நெருங்கினாலும் அதிலிருந்து வெளிவர அறியாதவர்களா நாங்கள்...

மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)Where stories live. Discover now