காதல்-67

677 48 29
                                    

பெண் சாத்தான்கள் அழிந்ததில் பெரும் அதிர்ச்சியடைந்த முப்பெரும் தேவன்கள் யுத்தத்தில் தடுமாறினர்... ஆனால் மேன்மேலும் கோவன்களின் தாக்குதல் எகிரிக் கொண்டே செல்ல... மதி எல்லாம் வேலைக்காகாது... நம் ஆயுதமான சதியை கையில் எடுப்போமென மூவரும் திட்டம் வகுக்க... அவர்களுக்காக கோவன்கள் வகுத்த திட்டம் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.... தன் சகோதரன்களின் கரத்தை பிடித்துக் கொண்ட விகாஷ்... ஒரே நேரத்தில் அவர்களை தன் சக்திகளுடன் இணைத்து கோவன்கள் மூவர் மேலும் அதிவேகமாய் கருப்பு ஒளியை செழுத்த.... மூவரும் அதை நோக்கி சிகப்பு நீலம் மற்றும் வெள்ளை ஒளிகளை செழுத்த.... இரண்டும் மோதி.... இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சம் என தாங்க இயலாமல் அங்குமிங்கும் ஆட... இறுதியில்.... இது வேலைக்காகாது என்பதை உணர்ந்த கோவன்கள் ஒரே அழுத்தமாய் அவர்களின் புறம் செழுத்த... முப்பெரும் தேவன்களின் ஒளி மாயையை தாண்டி சென்றவை அவர்களை மோதி பெரும் ஒளியுடன் வெடித்து அவர்களை தூர வீசியது.... அவர்கள் எழ முயலும் முன்னே மூவருக்கும் முன் பாய்ந்து போய் நின்றது சிம்மயாளி.... அவைகளின் கூர் பற்கலை கண்டு மூவரும் எச்சிலை விழுங்க.... இருந்த இடத்திலிருந்து எம்பிய கோவன்கள் சிம்மயாளிகளில் அமர.... அடுத்த நொடியே மூவரையும் அசுர வேகத்தில் தொறத்த தொடங்கியிருந்தது சிம்மயாளிகள்....

நாகனிகள் மாயா மற்றும் மோகினியுடன் கயலையும் துருவனையும் காப்பாற்ற உடனே கந்தர்வமலையின் அடிவாரத்திற்கு விரைந்தனர்....

தன் கோரப் பற்கலால் ஆகாஷ்ஷை பாய்ந்து கடித்தது அகி... அதில் அலரிக் கொண்டே அவன் கீழ் விழ.... அப்படியே மற்றவர்களும் விழ.... தொலை தூரத்தில் யாளி வம்சத்து வீராங்கனைகளை ஒரு பெரும் உயிரற்ற ஜடக்கூட்டம் சுற்றி வளைப்பதை கண்ட கோவன்கள் உடனே சிந்திக்காமல் சிம்மயாளிகளை அவர்களின் புறம் அனுப்ப.... அப்போது திடீரென க்ரிஷ்ஷின் முதுகு தண்டில் இறங்கியது ஒரு ஆலுயர வாள்.... அதில் அதிர்ந்த க்ரிஷ் திரும்பி... தன்னை குத்திய விகாஷ்ஷின் கழுத்தை இருக்கி பிடித்து உயர தூக்க.... அப்போது ஆகாஷ் சரியாய் இந்திரனின் வையிற்றில் வாளை இறக்க.... இவையை கண்டு சினத்தில் பொங்கி எழுந்த சத்தீஷ் இங்கு வரும் முன்னே.... அவன் தோலில் வாளை இறக்கினான் நகாஷ்.... விஷம் தடவப்பட்ட வாள் என்பதால் நொடியில் விஷம் மூளையை சென்றடைய.... சத்தீஷ் மற்றும் இந்திரன் தாங்க இயலாமல் கீழ் விழுந்தனர்.... அதை கண்டு ஆகாஷ்ஷும் நகாஷ்ஷும் புன்னகைத்து விட்டு திரும்ப.... க்ரிஷ்ஷின் கரத்தில் மூச்சுக்கு போராடிக் கொண்டிருந்தான் விகாஷ்... அதை கண்டு அதிர்ந்த இருவரும் க்ரிஷ்ஷை நெருங்கி... அவனை பின்னிருந்து தாக்க.... விகாஷ் தன் கழுத்தை பிடித்துக் கொண்டு இரும தொடங்கினான்.... க்ரிஷ்ஷின் மூளை மெல்ல மெல்ல செயல் இழக்க தொடங்கியது.... வெகு தொலைவில் தன் தோழர்களின் " இந்திரா... சத்தீஷ் க்ரிஷ் " என்னும் அழைப்புகள் கினற்றடியிலிருந்து ஒலிப்பததை போல் உணர்ந்தான்.... அப்போதும் அவன் வதனத்தில் சினம் குறையவில்லை...

மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)Where stories live. Discover now