காதல் -47

668 46 31
                                    

பருந்துகள் மிக தொலைவில் பறக்க.... பறவைகள் முழக்கத்தின் ஓசையில் அரண்டு பறக்க..... அங்கு மாபெரும் சத்தத்துடன் எட்டுத்திக்கிலும் ஒலித்தது வேந்தன்யபுரத்து எட்டு தளபதிகளின் அறிவிப்பு.... எட்டு பேரும் வரிசையாய் நிற்க.... அவர்களின் பின்... வேந்தன்யபுரத்தின் மாபெரும் சிப்பாய் படை ஈட்டி கேடையத்துடன் கம்பீரமாய் நிற்க.... அவர்களின் பின் குதிரைப்படையும் யானைப்படையும் நிற்க.... அங்கு கூடியிருந்த அனைவருமே அப்படையினர் அனைவரையும் கண்டு மிரிட்சியில் நிற்க... மேடையில் அமர்ந்திருந்த அரசி தேவசேனை புன்னகையுடன் எழுந்து நிற்க....

படைத்தளபதிகள் (யாழ் வேல் குரு பத்ரன்) : வீரர்கள் பிரிந்திட... என முழங்க....

ஈட்டி கேடையம் எந்தி நின்ற சிப்பாய்களில்.... பாதி சிப்பாய்கள்.... இடது புறம் நகர்ந்து.... வலப்புறம் பார்த்து திரும்பி நிற்க....

மருத்துவதளபதிகள் (மாரன் சூர்யா வெற்றி மித்ரன்) : மருத்துவவீரர்கள் பிரிந்திட.... என முழங்க....

ஈட்டி கேடையம் ஏந்தி நின்ற மீதி சிப்பாய்கள் வலப்புறம் நகர்ந்து.... இடது புறம் பார்த்து திரும்பி நிற்க....

தளபதிகள் : படைகள் வழி விடட்டும்... என முழங்க.... அடுத்த நொடி.... குதிரை படையினரும்... யானைபடையினரும்.... இடது புறத்திலும் வலது புறத்திலும் ஒதுங்கி நிற்க.... அவர்கள் பின்..... கம்பீரமாய் நின்ற இளவரசர்கள் மூவரும் அவர்களின் வாளின் பிடியில் வலது கரத்தை வைத்தவாறு நிமிர்ந்த நடை போட..... அங்கு கூடியிருந்த அனைவரும் இளவரசர்கள் மூவரையே ஆ வென வாயை பிளந்து பார்க்க.... கரோகோஷம் வேந்தன்யபுரத்தையும் தாண்டி மாபெரும் சத்தத்துடன் ஒலிக்க..... உக்ரதேவன் கிரகதேவன் மற்றும் ரனதேவன் பேரதிர்ச்சியில் வாயை பிளந்து அமர்ந்து இருக்க.....

ஸ்ரீயும் தாரிணியும் யுவனையும் சக்தியையும் இமைக்காது நோக்கினர்....

இளவரசர்கள் மூவரும் வேகமாய் நடந்து வர.... படைத்தளபதிகள் நாழ்வரும் நான்கடி இடது புறம் நகர்ந்து நிமிர்ந்து நிற்க.... மருத்துவதளபதிகள் மூவரும் நான்கடி வலது புறம் நகர்ந்து நிமிர்ந்து நிற்க...... அவர்களின் நடுவில் இருந்த எட்டடி இடைவேளை உள்ள இடத்தில்.... இளவரசர்கள் வந்து நின்றதும்..... ஒதுங்கி நின்ற படையினர் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க..... தளபதிகளும் இளவரசர்களும் நேர்கோட்டில் நடந்து வர.... அவர்களை பின் தொடர்ந்தவாறு சிப்பாய் படையும்... குதிரை படையும் .... யானைபடையும் வர...... இவர்கள் அனைவரின் முன்.... மேளதாலம் அமோகமாய் கொட்டப்பட.... நர்த்தகர்கள் இசை வாக்கியங்கள் இசைந்திட..... முரசுகள் கொட்டிட.... மக்களின் " வாழ்க வேந்தன்யபுரம்.... வாழ்க வேந்தன்யபுரம் " என்னும் கரகோஷம் எட்டுதிக்கிலும் பறவியது....

மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)Where stories live. Discover now