காதல்-7

1.3K 64 64
                                    


கண் வலியில் இமை மூடி முனகிக்கொண்டிருந்தாள் அனு... அப்போது சட்டென ஒரு அகோரமான முகம் அவள் கண்ணுள் வந்து போக.... பதறிபோய் இமைகளை பிரித்தாள்... சுற்றி தன் விழிகளை சுழற்றியவளுக்கு எதுவும் தென்படாமல் போக.. மெல்ல திரும்பியவளின் முன் வந்து போனது ஒரு கருகிய முகம்... டப்பென கண்களை மூடி " யுவா " என கத்திவிட்டாள்.... மிக நெருக்கத்தில் அனலாய் கொதித்த சுவாச காற்றை உணர்ந்து அவள் கண்களை திறந்த நொடி அவள் முன் நின்றான் க்ரிஷ்...அவன் தோற்றம் மிகவும் வித்யாசமாய் இருந்தது... விழிகள் இரண்டிலும் இருள் சூழ்ந்திருந்தது.... மாறாக அவனின் இருகிய இதழ் ஏளனப் புன்னகையை வீசியது... விரைப்பாய் நின்றான்... அவனின் வலது கை... வாளை பற்றியிருந்தது... அவனை கண்டவளின் விழிகள் பிரமிப்பில் பிளந்தது... ஏனெனவே தெரியாமல் அவளின் இதயம் படபடவென அதிவேகமாய் துடிக்க தொடங்கியது... ஒரு மெல்லிய குரல் சத்தமாய் ஒலித்தது அவள் மனதினுள்.... " இவன் உன் யுவா இல்லை ".... அவளுள் இதழும் தானாய் அசைய தொடங்கியது... " நீ என் யுவா இல்லை " என்று.... அவள் முன் நின்ற க்ரிஷ் அவளை அதே ஏளனப்புன்னகையுடன் நெருங்க... திடீரென அவனின் வாளை அவள் மேல் அதிவேகமாய் ஓங்கினான்.... அவள் அச்சத்தில் கண்களை இருக்கி மூடிக் கொள்ள... க்ரீச் என்ற சத்தத்தின் பிறகு... எதுவும் நடக்காததை கண்டு கண்களை திறக்க... அவள் கண்டதை அவள் கண்களே நம்பாமல் தான் காண்பது கணவா நெணவா என அவளையே கேள்விக் கேட்டது....

க்ரிஷ் வாளை அனு மேல் ஓங்கியவாறே நிற்க... அவன் முன் அனுவிற்கு அரணாய் நின்றிருந்தான் மற்றுமோர் க்ரிஷ்... கண்களிள் தீ ஜ்வாலை கொழுந்து விட்டு எறிய... கைகள் உடும்பாய் வாளை பற்றியிருக்க.... முன்நின்றனின் வாளை எதிர்த்து நின்றான்.... புதிதாய் வந்தவனை கண்டு அதிவேகமாய் துடித்த அனுவின் இதயம் மெல்ல அடங்கி பழைய நிலைக்கு திரும்பியது... புதிதாய் வந்தவனை கண்டவளின் இதழ்... " யுவா " என முனுமுனுத்தது.... க்ரிஷ்ஷின் முன் நின்றிருந்த க்ரிஷ்ஷின் உருவம் மாற தொடங்கியது.... ஆறடி அண்... மிடுக்கான உடல்... கேட்பாரற்று அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருந்த கேசம்... சுத்தியலை போன்ற கைகள்.... என ஒரு பாடிபில்டரை போல் இருந்தான்.... க்ரிஷ் அவனின் கைகளை சுழற்றி அவன் வாளாள் அந்த புதியவனின் மேல் தாக்க... காற்றாய் கரைந்து போனான் அவன்.... சில நொடிகளிளே முன் நின்ற க்ரிஷ்ஷும் கரைந்துவிட.... கண்களை மூட திறந்தாள் அனு.... அவள் மெத்தையில் முன்பு அமர்ந்திருந்ததை போன்றே அமர்ந்திருந்தாள்...

மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ