நாயகன்கள் அனைவரும் காலை ஆட்டிக் கொண்டு ஆலமரத்தின் திடலில் அமர்ந்திருந்தனர்.... யோக்யா அங்கேயே சுருங்கி கீழே அமர்ந்திருந்தது... கோவன்கள் மூவரும் கண்களை மெல்ல பிரித்திருந்தனர்.... சத்தீஷ் இந்திரனிற்கு கண்கள் சரியாகி இருப்பினும்... இன்னும் க்ரிஷ்ஷின் கண்களில் எரிச்சல் குறையவில்லை....
சரண் : என்ன டா போனவளுங்கல இன்னும் காணும்...
அஷ்வன்த் : தெரியலையே டா...
இந்திரன் : வருவாளுங்க டா... அமைதியா இருங்க...
க்ரிஷ் : எனக்கென்னமோ மனசே சரி இல்ல.... அங்க என்னமோ நடக்குதுன்னு நெனக்கிறேன்...
வீர் : நம்மளால கீழையும் போக முடியாதே டா...
யோக்யா : கவலை கொள்ளாதீர்கள்... அங்கு ஒன்றும் நடக்காது.... விரைவில் வந்துவிடுவர்... என்று தைரியமூட்டியது...
படியை நோக்கி நகர்ந்த நாயகிகள் திடீரென கேட்ட ஏதோ ஒரு சத்தத்தில் திரும்பி நோக்கினர்.... அங்கு நோக்கிய அனைவரின் கண்களும் நொடியில் அகன்றது.... நடுவிலிருந்து நகர்ந்திருந்த நாகனிகள் மூவரும்.... மூன்று பக்கத்தில் இருந்த நாக அச்சு இல்லாத கட்டத்தில் காலை தவறுதலாய் பதித்திருந்தனர்.... மற்றவள்கள் சாதாரண கட்டங்களில் நிற்க... நாகனிகள் மூவரின் கண்களும் நொடியில் நிறம் மாற தொடங்கியது... அதை உணர்ந்துக் கொண்டனரோ என்னவோ... மூவரையும் ஏதோ ஒரு சக்தி மெல்ல மெல்ல கட்டுப்படுத்த தொடங்கியது....
ப்ரியா : கெர்ள்ஸ்.... மேல ஓடுங்க...
தான்யா : என்ன டி ஆச்சு உங்களுக்கு....
அனு : எங்களுக்கு ஒன்னும் இல்ல... மேல போங்க.... என கத்த...
வர்ஷி : திவி... ஏய் என்ன டி பன்ற....
திவ்யா : ஒன்னும் இல்ல டி.. மேல போங்க.... என அவளின் கூந்தலை இருக்கி பிடித்துக் கொண்டு கத்த.....
அனு :சொன்னா கேளுங்க... போய் தொலைங்க டி.... என அவளின் கைகளை அவர்களின் புறம் வீசினாள்....
அவளின் கரங்களிலிருந்து பாய்ந்த கருநீல நிற ஒளி அதிவேகமாய் அவர்களை தாக்க பாய.... அதை கண்டு அனு அதிர்ச்சியடைந்து தடுக்க முயல.... அவளால் முடியாது போனதை உணர்ந்து... திவ்யாவும் ப்ரியாவும் அவர்களின் கரங்களை ஒரே நேரத்தில் அவர்களின் புறம் வீச... அவர்களின் கரங்களிலிருந்து பாய்ந்த நீல ஒளி மற்றும் வெள்ளை ஒளி.... அனுவின் மாயையின் வேகத்திற்கு ஈடு கொடுத்து.... அதை தடுக்காமல் அதனுடனே சேர்ந்து... மூன்றும் ஒன்றிணைந்து தாக்க.... பேர் ஒளி ஒன்று உருவாகி சிதற.... நாகனிகள் மூவரும் கண்களை இருக்கி மூடி நோ என பெருங்குரலெடுத்து அலர... அதை வெளியிலிருந்து கேட்ட நாயகன்கள் பதறி போய் அக்கதவின் அருகில் வர.... அவர்கள் உள் நுழைய முயற்சிக்கும் போது.... மின்சாரம் பாய்ந்து கீழே தள்ளப்பட்டனர்....
YOU ARE READING
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)
Fantasyஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கி...