கண்களிலில் மேலும் கண்ணீர் சுரக்க வழி இல்லாது வரண்டிருக்கும் போதும் கூட... விடாமல் கண்ணீரை சுரந்தது அப்பேதையவளின் காந்த விழிகள்.... பலர் அவ்விழியை இரசிக்க வரிசையாய் வந்து நின்றாலும் அவ்விழி இரசிக்க வேண்டியவனோ.... அவ்விழியை இரசிக்க வேண்டியவனோ தொலை தூரத்தில்..... அளவில்லா தூரம்.... கடல் மலை பாலைவனம் காடு என அனைத்திற்கும் பின் அவன்.... அவனும் அவர்களும்.... மறைந்தவனுக்காய் கண்ணீர் சிந்துவதா... தன்னுடனே தனிமையில் வாடும் இருவருக்காகவும்... குடும்பத்திற்காகவும் கண்ணீர் சிந்துவதா என்ற குழப்பமேதும் இல்லாமல் நில்லாமல் வலிந்தோடியது கண்ணீர்.... அசைந்தாடும் கேசத்திற்கு கூட அவள் வலி அறியுமோ என்னவோ... அவளை தொந்தரவு செய்யாமல் மெதுவாய் அசைந்தாடிக் கொண்டிருந்தது.... பெண்ணவளின் அறை கதவு மெல்ல திறக்கப்பட.... இருள் சூழ்ந்திருந்த அவ்வறையில் வெளிச்சம் வர.... கண்களை மெல்ல திறந்தவளுக்கு உள்ளே ஒரு ஆடவன் வருவது புரிய.... மீண்டும் கண்களை இருக்கி மூடிக் கொண்டாள்.... வந்தவன் அவள் அருகில் அமர்ந்து அவள் கேசத்தை தொடப்போக.....
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴தர்மன் ஐயா : இது நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லையே... நான் என் செய்வேன்... நான்கு வம்சத்தினருக்கும் அழிவில்லை என்றல்லவா அக்குடும்பத்தினரிடம் விவரித்து வந்தோம்... ஆனால் இப்போது அக்குடும்பத்தில் மரணம் விழப்போகிறதே... மரணிக்க போவது யாரென தெரியவில்லையே... இறைவா... இது உனக்கே அடுக்குமா... கோவன்களும் சஹாத்தியவம்ச சூரர்களும் தங்களுக்கு என்ன செய்தனர்... அவர்கள் தங்களுக்கு செய்தவை எல்லாம் இவ்வுலகை காக்கத்தானே... தற்போது அவர்களை போய் காவு வாங்க பார்க்கிறாயே... கோவன்களுக்கு நிச்சயம் அழிவு வரப்போவதில்லை... அப்படி இருப்பின்... சஹாத்திவம்ச சூரர்களுக்கு தான் உன் குறியா... அவர்களில் ஒருவரா... அல்ல இருவரா... அல்ல அனைவருமா... ஏதேனும் பதில் கூறு இறைவா... குரு தந்திராவும் உயிருடன் இல்லையே.. நான் என் செய்வேன்... இறைவா.. தயவு கூர்ந்து அவர்களை கொன்றுவிடாதே... அது இவ்வுலகிற்கே பெரும் பேராபத்தை விழைவித்திடும்... மூன்று பிறவியிலும் அவர்களை மரணிக்க வைத்த நீ... இப்பிறவியிலாவது வாழ விடமாட்டாயா.... இந்த திடீர் திருப்பம் எதனால் நேர்ந்ததோ... இறைவா.... என கதறினார்....
YOU ARE READING
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)
Fantasyஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கி...