காதல்-24

759 40 33
                                    

மாயா அழிந்துவிட்டாள் என்று குத்தாட்டம் போட்டவர்களுக்கு இடியாய் வந்து விழுந்தது மாயா இறக்கவில்லை என்னும் விஷயம்.... அவளின் பிம்பத்தை கண்டமையால்..... மாயாவின் முன் அரணாய்... தன் செம்மை நீலம் மற்றும் வெண்மை படர்ந்த இறகை அசைத்து பறந்துக் கொண்டிருந்தது ஒரு பருந்து... மேகலாயா மற்றும் மதுசூதனா விடுதலை பெரும் சமயம்.... வான் நோக்கி பறந்து... மாயை அனுப்பிய அதே பருந்து.... தனக்கு ஒன்றும் ஆகவில்லையே எப்படி என முன்னோக்கியவள்... அப்பருந்தை கண்டு... மற்றவர்களுடன் பேரதர்ச்சிக்கு உள்ளானாள்....

ஆகாஷ் : எப்படி... எப்படி... இது சாத்தியமே இல்லை... கோவன்களின் சேவகன்... இத்துனை காலங்கள் அவர்களுக்கு வினயளித்த மோகினியின் சரிபாதியை காப்பாற்றுகிறானா???

மதுசூதனா : ஏதோ இரகசியம் நடந்திருக்கிறது.... நாம் அறியாத ஒன்று...

மேகலாயா : அதற்கு வாய்ப்பே இல்லை மதுசூதனா... இவளை காப்பாற்ற வளவன் எப்படி முன் வந்தான்....

வளவன் என நாமம் கொண்ட அப்பருந்து.... பறந்துக் கொண்டே பேசியது....

வளவன் பருந்து : என்ன நினைத்தீர்கள் மூடர்களே.... மாயாவை அழிக்க முடியுமென்றா... இல்லை... நிச்சயம் இல்லை.... கோவன்களின் வாக்கை தாங்களும் மறந்துவிட்டீர்களோ... " இம்மண்ணில்... எந்த ஒரு அப்பாவி மற்றும் தூய ஆத்மா கொண்ட உயிரும் பிரியாது..." மாயா தூயவள்.... மாயமோகினி... எங்கள் கோவன்களின் நலன் விரும்பி... உங்களின் சதியால் மாயா மற்றும் மோகினி என இரண்டாய் பிரிந்து மோகினி தீயசக்தியின் கட்டுப்பாட்டில் திண்டாடிக் கொண்டிருக்கிறாள்.... மாயாவை என்றுமே கோவன்கள் அழிய விடமாட்டார்கள்.... யான் இம்மலையின்... கண்காணிப்பாலன் மட்டுமல்ல... தேவைப்படும் நேரத்தில் மாயமோகினியின் பாதுகாவலன்.... என கம்பீரக்குரலை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைய....

நகாஷ் : அப்படியெனில்.... அன்று குகையில் மூவரும் துருவனை குரோதமாய் தாக்கியதன் காரணம் என்ன?? அவன் கூட சதியால் மாறியவன் தானே.....

மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)Where stories live. Discover now