வெளியே வந்த டாக்டர்... இடவலதாய் தலையாட்டிவிட்டு நகர்ந்தார்... அங்கிருந்த முகிலின் ஆசிரியர்... தலையில் அடித்துக் கொள்ள.... வலி தாங்க முடியா ஒவீ.... கத்தி அழுதாள்... அடுத்த நொடி மயங்கி சரிந்தாள்... தற்போதே இரத்தம் தந்தவள் உடலில் தெம்பில்லாததால்.... வலு இல்லாமல் மயங்கி இருந்தாள்.... மெல்ல மயக்கம் தெளிந்து கண் விழித்த சமயம்.... அவள் வீட்டில் இருந்தாள் ஒவீ.... முகிலை பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாமல் பித்து பிடித்தவள் போல் அலைந்தவள்... பின் வீனாவின் அரவணைப்பிலே சிறிது சிறிதாக வெளிவந்தாள்.... ஆனால் அவள் மனதினுள் நுழைந்திருந்த அவளின் முகி.... பத்து வருடமாய் செல்ல மாட்டேன் என முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறான்..... நேற்று அந்த ஆடை கூட முகிலுக்கு நன்றாக இருக்குமே எனவே எண்ணினால்... ஆனால் முகிலை 17 வயது முகியாய் எண்ணியதால்... முகி தான் முகில் என அவளுக்கு தெரியவில்லை... புரியவுமில்லை... இரண்டு நாட்களாய் அவனின் நினைப்பே அவளுள் ஆட்டிப்படைக்க.... மெல்ல... முகில் அவளின் முகியாய் காட்சி அளிக்க தொடங்கினான்.... இன்று அவனின் ஆத்மரூபத்தை கண்டவளுல் அளவில்லா வலி.... அன்று முகில் நிருவை தான் காதலிக்கிறான் என நாயகன்கள் அனைவரும் மொட்டை மாடியில் அவனிடமே கூறும் போது.... அவள் கண்ணில் தெரிந்த வலியை விட அதிக வலி... அப்போதே அவன் கழுத்தில் தெரிந்த ஒரு அச்சை வைத்து... இவன் தான் தன் முகி என கண்டுக்கொண்டாள்......
ஒவீ : இதான் நடந்துச்சு..... நீ எறந்துட்டன்னு சொன்னதும்... மயங்குனவ தான்... அடுத்த நாள் தான் எந்திரிச்சேன்....
வீனா : ஆமா அதுக்கப்ரம்... ஒரு வாரம்... முகி முகி ன்னு புலம்பிக்கிட்டே இருந்தா... ஆனா அதுக்கப்பரம் அந்த பெயர அவ சொல்லி நா இன்னைக்கு தா கேக்குறேன்....
அஷ்வன்த் : ஆமா முகில்க்கு... பத்து வர்ஷம் முன்னாடி அந்த அக்ஸிடென்ட் ல அந்த பாதி வர்ஷத்துல நடந்த எதுவுமே நினைவுல இல்ல... அங்க என்ன ஆச்சுன்னு தெரியல... கேம்ப் முடிஞ்சு மூணாவது நாள் தலைல ஒரு கட்டோட வீட்டுக்கு கூட்டீட்டு வந்தாங்க....
YOU ARE READING
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)
Fantasyஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கி...