அளவில்லா மகிழ்ச்சியில் திண்டாடிப் போயினர் நாயகர்கள்... பரமேஷ்ரன் லலித்தா இறந்தது ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவே இருந்தாலும்... வனித்தாவின் எதிர்பாரா அதிர்ச்சியில் மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தனர்....
முகில் : எப்டி... டார்லிங்... எப்டி எந்திருச்சீங்க...
வனித்தா : எல்லாம் கயல் குட்டி பன்ன வேலை டா....
ரனீஷ் : கயல் குட்டியா??? அவ என்ன மா பன்னா..???
இலக்கியா : எங்களுக்கே தெரியல டா... நாங்க வீட்டுக்குள்ள வரோம்... ரூம் ல கயல கட்டிப்புடிச்சிட்டு அண்ணி உக்காந்துருந்தாங்க.... எங்களுக்கு சந்தோஷத்துலையும் அதிர்ச்சிலையும் பேச்சே வரல...
மாதவன் : சரி சரி... இப்போ எல்லாரும் ஒன்னாவே தெரிஞ்சுப்போம்.. சொல்லு வனித்தா....
சில மணி நேரம் முன்பு.... நாயகிகள் கடத்தப்பட்ட சில மணி நேரங்களிளே ஒவீயின் சக்தியால் தன் பட்டாளத்துடன் விளையாடிக் கொண்டிருந்த கயல் தானாக வனித்தாவின் அருகில் வந்து உறங்க ஆரம்பித்தாள்..... வனித்தாவின் உடல் மெல்ல மெல்ல குணமடைந்த காரணத்தால்... அருகில் நடக்கும் காட்சிகளை அவரால் மேலோட்டமாக உணர முடிந்தது... தன் அருகில் உறங்குவது கயல் தான் என முடிவெடுத்து.... அவரும் அவளுடனே உறங்க தொடங்கினார்.... சில நிமிடங்கள் அடுத்து... வனித்தாவின் மூளையில்... ஏதோ ஒரு குரல்.... விடாமல் ஒலித்தது..... ஒரு குழந்தையின் குரல்.... " அம்மா அம்மா...." என்ற அழுகுரல்.... நகர முடியா நிலையில் இருந்த வனித்தாவின் மனதை லேசாய் தட்ட தொடங்கியது.... மேலும் மேலும் அழுகை வீரியமானதை அவரின் மனதால் உணர முடிந்தது... இதயம் துடிப்பினும்.... மூளை வேலை செய்யாது... உடலின் அத்துனை பாகங்களும்... அப்படியே இருக்க.... ஓயாத அழுகை சத்தம்.... சிறிது சிறிதாக நினைவை எழ வைத்தது... ஒரு கட்டத்தில்..... அவரின் மூளையே... இவ்வழுகையை கேட்க வைக்க..... இருபத்தி இரண்டு வருடம் முன்.... இதே போன்ற அழுகை... இதே அம்மா என்ற கதறல்கள்.... முன் நிழற்படமாய் ஓட.... அவரின் கண் முன் வந்து போனது.... மூன்று வயதான க்ரிஷ் இந்திரன் மற்றும் சத்தீஷின் முகங்கள்..... சட்டென கண்களை திறந்தார் வனித்தா..... பார்வை மங்களாக இருக்க.... இத்துனை ஆண்டுகள் மூடி இருந்ததால்... கண்கள் வலியில் உறுத்த... கைகளும் அசைய மறுத்து வலியை உணர்த்த... மெல்ல மெல்ல பார்வை தெளிவடைந்து... தான் தங்களின் வீட்டில் தான் இருகிறோம் என புரிய வைத்தது.... மீண்டும் அதே அழுகுரல் கேட்க.... அப்போதே அது கயலின் அழுகை என புரிந்தது வனித்தாவிற்கு....
VOUS LISEZ
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)
Fantasyஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கி...