காதல்-34

713 41 15
                                    

ஷேஷ்வமலையின் அடிவாரத்தில்... தான் தேடி வந்த ஓர் மூலிகையுடன் தன் குடிலுக்கு திரும்பினார் தர்மன் ஐயா... இரவு வெகு நேரம் கடந்து... நிலா உச்சத்தில் இருந்தது... தன் மெல்ல எட்டுக்களுடன் குடிலை அடைந்தார்... குடிலின் வாயிலில்... தன் முட்டை கண்கள் உறக்கத்தில் சொருக.... ஜொய்ன் ஜொய்ன்... என முன்னும் பின்னும் வந்துக் கொண்டே கட்டை ஒன்றில் அமர்ந்திருந்தாள் பரிசி.... அவளை கண்டு புன்னகையுடன் நெருங்கிய ஐயா.... பரிசி என அழைக்க.... உடனே உறக்கம் தெளிந்து எழுந்தவள்... அவரை இழுத்துக் கொண்டு குடிலுக்குள் சென்று அமரவைத்தாள்...

பரிசி : ஐயா ஐயா....

தர்மன்ஐயா : கூறு பரிசி... ஏன் இந்த அவசரம்??

பரிசி : அவசரமெல்லாம் இல்லை ஐயா... தங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்........

தர்மன்ஐயா : என்னிடமா... அப்படி என்ன கேட்கப்போகிறாய்......

பரிசி : நீங்கள் கூறுங்கள்... யாரிந்த கோவன்கள்....

தர்மன்ஐயா : ஏன் இந்த திடீர் சந்தேகம் என் பெயர்த்திக்கு???

பரிசி : வெகுகாலமாய் இருக்கிறது ஐயா.... என் நான்கு வயதிலிருந்தே நானும் காண்கிறேன்... நம் மக்கள் அனைவரும்... கோவன்கள் என்றவர்களுக்கு... மரியாதை செழுத்துகின்றனர்... ஆனால் யாருமே அவர்களை பற்றி அறியவுமில்லை... கண்டதுமில்லையாம்.... அப்படியிருக்க... தாங்கள் அறிய வாய்ப்புள்ளதல்லவா...

தர்மன்ஐயா : ம்ம்ம் அறிவேன்.... சரி கேள்... கோவன்கள் என்பதற்கு... தலைசிறந்த தலைவன்கள் என்பதே அர்த்தம்.... யான் அன்று கூறியதைப் போலவே... இறைவன்... மூன்று ஆடவன்களை எட்டறிவுடன் படைத்தார்... அவர்களே கோவன்கள் என அழைக்கப்பகின்றனர்... உமக்கு இன்னும் எளிதாக கூற வேண்டுமானால்... நம் புவியின் மற்ற இறைவன்கள் என கூறலாம்....

பரிசி : அவர்களுக்கு ஏன் நாம் மரியாதை செழுத்துகிறோம்??? மற்ற மனிதர்கள் அவர்களை நினைவுகூர்ந்ததாய் தெரியவில்லையே....

தர்மன்ஐயா : அதுவா... கோவன்கள் பிறப்பெடுத்தது நம் ஷேஷ்வமலையில் தான்.... நம் மக்கள் இங்கு பலாயிரம் வருடங்களாய் வாழ்ந்து வருகிறோம்... நாம் அதே முறையை தான் பின்பற்றி வருகிறோம்... ஆனால் வெளியில் வாழும் மனிதர்கள் நம்மை போன்றவர்கள் இல்லையம்மா... அவர்களின் அறிவு என்றோ கடந்து... உலகை காத்தவர்களை மறந்து... மாயை மேல் உள்ள நம்பிக்கை விளையாட்டாய் போய் விட்டது...

மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)Wo Geschichten leben. Entdecke jetzt