நாயகன்களின் ஆடை தேர்ந்தெடுக்கப்பட்ட சில நொடிகளிளே என்னவள்களுக்கு நாங்கள் தான் ஆடை எடுப்போம் என ஒருவர் ஒருவரை இழுத்துக் கொண்டு சென்றனர்... ஒவீ நிரு ப்ரியா சத்தீஷ் முகில் ஐவரும் ஒரே இடத்தில் தேடி கொண்டிருந்தனர்.... ஒரு ஒரு புடவையாய்... ப்ரியாவிற்காக பார்த்துப் பார்த்து தேர்வு செய்துக் கொண்டிருந்தான் சத்தீஷ்.... கருப்பு நிறத்தில்.... க்ரே பாடரிட்ட புடவையை அழகாக இருக்கு என மறைமுகமாக கூறினான்.... ப்ரியா மறுக்காமல் அதையே எடுத்துக் கொண்டாள்....
நிரு மற்றும் முகில் புடவைகளை அலசி கொண்டிருக்க... ஒவீயின் நினைவோ அதே ஷெர்வாணியில் நின்றது...
மூளை : அவன் தான் செத்துட்டானே... ஏன் இப்போ நீ அவனையே நெனச்சிக்கிட்டு இருக்க..???
மனம் : ஏன் நானும் தான் செத்துட்டேன்... இங்க யாரும் என்ன நினைக்காம இல்லையா???
மூளை : அறிவா பதில் சொல்றன்னு நெனக்காத... உனக்கு அது கிடையாது...
மனம் : உனக்கு அறிவ பத்தியும் வாழ்க்கைய பத்தி மட்டும் தான் தெரியும்... எனக்கு தா நா அனுபவிச்ச வலி தெரியும்...
மூளை : ஒவீனா.... அது சொல்றத கேக்காத.... நா சொல்றத கேளு...
மனம் : ஒவீனா.... அன்னைக்கு மட்டும் நீ நா சொல்றத கேட்டுருந்தா... எட்டு வருஷத்துக்கு முன்னாடி ரொவீ மேல கோவப்பற்றுக்க மாட்ட... வனோஜா சதியில மாட்டியிருக்க மாட்ட...
மூளை : உன்ன கொழப்புது ஒவீனா... நீ கேக்காத... நா சொல்றத மட்டும் கேளு...
மனம் : நா சொல்றத கேளு....
முகில் : நா சொல்றத மட்டும் கேளு ஒவீ... என திடீரென முகிலின் குரல் கேட்டு அவள் முளிக்க... அவளின் முன்.... நிரு கருப்பு நிற புடவையையும்... முகில் பின்க் நிற புடவையையும் வைத்துக் கொண்டு... இருவரும் முட்டிக் கொண்டிருந்தனர்...
நிரு : ஒவீ மா... உனக்கு ப்லக் தான் நல்லா இருக்கும்... நா சொல்றத கேளு
முகில் : இல்ல.. இல்ல.... உனக்கு பின்க் தான் நல்லா இருக்கும்... என இருவரும் பாடிய பாட்டையே பாடிக் கொண்டிருக்க...
YOU ARE READING
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)
Fantasyஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கி...