காதல்-51

603 42 25
                                    

நடுகல் நடப்பட்ட சிறு நிம்மதியில்.. வீரர்கள் ஓய்வெடுக்க.... நம் நாயகர்கள் விடியலுக்காய் கண் கொத்தி பாம்பாய் அமர்ந்திருந்தனர்.... விடியலும் வெகு விரைவிலே நிகழ்தேற... மிக கோரமாய் நிகழ்தேரியதனைத்தும்.... போரும் மீண்டும் மீண்டும் விடியலில் தொடர்ந்துக் கொண்டே இருக்க..... வெவ்வேறு இடங்களில் அப்பாலையில்.... அடைக்கலமெடுத்து தங்களை பாதுகாத்துக் கொண்டது இரு நாட்டு படைகளும்.....
போர் நீண்டுக் கொண்டே செல்ல.... சரியான மருத்துவம் இல்லாமல் கந்தர்வவீரர்கள்... தினம் மரணமடைந்துக் கொண்டிருக்க.... வேந்தன்யபுரத்து படையுடனே வந்த மருத்துவகுழு... மருத்துவநாயகிகள் மற்றும் நம் மருத்துவதளபதிகளும்.... சரியான மருந்தளித்து வேந்தன்யபுர வீரர்களில்... முடிந்தவரை... தக்க மருத்துவத்தை அளித்து காப்பாற்றினர்...

தினம் தினம் உயிர் சேதமும் காயமும் பெருகிக் கொண்டே இருக்க.... போரில் தீவிரமும் அதிகரித்துக் கொண்டே தான் போனது.... 21 நாட்கள் தொடர்ந்த போரில்... இன்று கூட ஓர் முடிவு கிடைக்கவில்லை.... விடாமல் போரை நீடித்துக் கொண்டே தான் செல்ல வைத்தனர்.... எந்த வீரருமே... அவரவர் உயிருக்காய் அச்சப்படாமல்... நாட்டை காக்க வேண்டும் என்னும் வெறியுடன் போரிட்டனர்.... எத்துனை காயம்ப்பட்டு... படுக்கையில் வீழ்ந்தாளும்... மறுநாள் காலை.... எதுவும் நடவாததை போலே எழுந்து மீண்டும் கலத்தில் இறங்குவர்.... ஆண்கள் மட்டுமல்ல... பெண்களில் கூட... அர்களின் உடல் வலு குறையினும்.... வலியை காட்டது.... வெறிகொண்டு பலரை வீழ்த்தினர்....

இதில் சிலரை காயப்படுத்துவதை விட..... பலரை காக்க வேண்டி.... நம் தளபதிகள் பாதுகாப்பளித்து.... தங்களுக்கு காயத்தை பெற்றுக் கொண்டனர்... இதில்.... தலையில் பெரும் அடியை பெற்ற வேல்.... ஓர் நாள் முழுவதும் நித்திரையில் ஆழ்ந்திட... அவனை எழ வைப்பதற்குள் போதும் போதுமேன ஆகிவிட்டது வேந்தன்யபுரத்து படை... எழுந்தவனை தக்க மருந்தளித்து... உயிரை காப்பாற்றி... ஓய்வெடுக்க வைக்க.... அவனோ மறுநாள் அனைவருக்கும் முன்.... எழுந்து வாள் பயிற்சி செய்துக் கொண்டிருந்தான்... எக்காயமும் இல்லாததை போலே... மீண்டும் தன் படையுடன் கலத்தில் இறங்கினான்...

மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)Where stories live. Discover now