காதல்-19

879 47 31
                                    

போனை எடுத்துக் கொண்டு வந்த முகில்... ஒரு தகவலும் இல்லை என தலையை இடவலமாய் ஆட்டினான்.... நேராக ஜெயிலுக்கே செல்லலாம் என முடிவெடுத்து முகில் க்ரிஷ் இந்திரன் சத்தீஷ் மற்றும் ரவி செல்ல.... அஷ்வன்த் ரனீஷ் வீர் மற்றும் ரித்விக் வீட்டிற்கு திரும்பினர்... அதே நேரம்... முகிலின் செல் சினுங்க... அதை எடுத்தவன்... சரத் இறந்த அன்று கிடைத்த மொபைல் போனை ரிப்பேர் க்கு கொடுத்திருந்த கடை காரரிடமிருந்து போன் வருவதை கண்டு ஸ்பீக்கரில் போட்டான்..

கடைகாரர் : சர்...போன் ரெடி ஆய்டுச்சு.... எப்போ வந்து வாங்கிக்கிரீங்க???

முகில் : இன்னைக்கே வரோம்... வச்சிர்ரேன்... என போனை வைத்ததும்... க்ரிஷ் மற்றும் இந்திரன் போனை வாங்க அக்கடைக்கு சென்றனர்....

வீட்டில் வெட்டியாக இருந்த நாயகிகள் மண்டபத்திற்கு செல்ல கிளம்ப... பவியோ ஆராய்ச்சியில் மூழ்கியதால்... அவளை வீட்டிலே விட்டு விட்டு தனியாக சென்றனர்.... கட்டிடத்தின் அருகில் சென்றவர்களுக்கு இன்று ஏதோ வித்யாசமாய் இருப்பதை அறிந்து மெதுவாய் உள் செல்ல... அங்கோ ஒரு தடியை பிடித்துக் கொண்டு.... மரத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தார் ஒரு பெரியவர் (தர்மன் ஐயா) ... அவரை கண்ட நாயகிகள் அருகில் செல்ல... தானாய் கண்களை திறந்தவர்... அவர்களை கண்டு மனம் நெகிழ்ந்தார்....

ப்ரியா : யாரு ஐயா நீங்க...

தர்மன் ஐயா : நான் தர்மன் அம்மா....

அனு : தர்மனா இதே பேரு தான நம்ம தாத்தா சொன்னாங்க.... அவரு தானா இவரு...

தர்மன் ஐயா : ஆம் அம்மா...நானே தான் அது... குழப்பம் தீற வழியை தேடி வந்தீர்களோ...

ஒவீ : ஐயா...உண்மைய சொல்லுங்க... எங்கள உங்களுக்கு முன்னாடியே தெரியும் தானே....

தர்மன் ஐயா : உண்மை தான்... உங்களை நான் முன்பே அறிவேன்....

நிரு : அப்போ எங்களுக்கு சில உண்மைகள சொல்லுங்க... க்ரிஷ் இந்திரன் சத்தீஷ் க்கு எப்டி இந்த சக்திகள் வந்தது????

தர்மன் ஐயா : விதி அம்மா...விதி...இந்த அகில உலகத்தை காக்க பிறந்தவர்களே அம்மூவர்.... இந்த அகல பறந்து விரிந்த புவியின் கோவன்கள்.... அதாவது தலை சிறந்த தவைவன்கள்....

மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)Where stories live. Discover now