காதல் -35

806 47 59
                                    

பட்டாம்பூச்சியாய் மகிழ்ச்சியுடன் பறந்த வர்ஷி... இன்று நிம்மதி இழந்து... கல்லூரி தோட்டத்தில்... நிருவின் மடி சாய்ந்து கதறிக் கொண்டிருந்தாள்.... மது அர்ஜுன் நிரு என அனைவரும் அவளை பார்த்து முளித்துக் கொண்டிருந்தனர் அவள் அழுகையின் காரணம் அறியாமல்...

நிரு : வர்ஷி.. என்ன டி ஆச்சு... ஏன் இப்டி அழுகுர... என்ன ஆச்சு...

அர்ஜுன் : அழாம என்ன ஆச்சுன்னு சொல்லு மா...

அவளோ விடாமல் அழுகையை தொடர்ந்தாள்... அவளின் தலையை மென்மையாய் வருடிய மது...

மது : வர்ஷி... உனக்கு நாங்க இருக்கோம்... என்ன பிரச்சனையா இருந்தாலும்... உனக்கு பக்கபலமா நிக்க நாங்க இருக்கோம்... தைரியமா பேஸ் பன்னலாம்... சொல்லு என்ன ப்ராப்லம்... அதற்கேற்றார் போல் நிரு அவளை அணைத்துக் கொள்ள... அர்ஜுன் அவளின் கைகளிள் அழுத்தம் கொடுத்து இருக்கி பிடித்துக் கொண்டான்...

மெல்ல அழுகையை நிருத்திய வர்ஷி.... நிருவின் மடியில் படுத்துக் கொண்டே... அர்ஜுனின் கைகளை விடாமல் பிடித்துக் கொண்டாள்.... கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை நிலை படுத்துகிறாள் என அர்ஜுனின் கை அசைவுகள் மூலம் உணர்ந்துக் கொண்டனர்....

வர்ஷி : என் பக(bag) எடுத்து பாரு... என்றாள் மெதுவாய்... அதை எடுத்த மது... அதில் வித்யாசமாய் ஏதும் இல்லாமல்... ஒரு போட்டோ மட்டும் இருப்பதை கண்டு... அதை எடுத்து பார்த்தவள்....

மது : ஏ லூசு.. இதுக்காடி இப்டி அழுவுர.... என கேட்க.... வெடுக்கென நிருவின் மடியிலிருந்து எழுந்தாள் வர்ஷி...

நிரு :என்ன டி...

மது : இங்க பாரு டி... என போட்டோவை காட்ட... அதில் ஒரு தாத்தா... இருந்தார்....

நிரு : இதுல என்ன...

மது : லூசு... அவரு எறந்துட்டாரு போல... கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் கூட யாரும் ஒட்டலையேன்னு கஷ்ட்டப்படுரா...

அர்ஜுன் : ச அவ்ளோ தானாடி... இன்னைக்கு நைட்டு குள்ள... மொத்த ஊட்டிலையும் இவரு போட்டோ.. கண்ணீர் அஞ்சலி ன்னு தொங்கும் பாரு... நா போய் அதுக்கான வேலைய பாக்குறேன் என எழுந்திருக்க..... சிரிப்பை மறந்திருந்த வர்ஷி... வாய் விட்டு சிரித்தாள்....

மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)Où les histoires vivent. Découvrez maintenant