காதல்-25

765 42 34
                                    

அதே இடத்தில்..... சில அடர்ந்த மரங்களின் பின்.... துருவனை ஏந்தியவாறு மோகினி நிற்க... அவள் அருகில் கைகளிள் கருப்பு தீயுடன் நின்றாள் மாயா.... அவர்களுக்கு முன் மேகலாயா மற்றும் மதுசூதனா நின்றனர்.... இந்நாழ்வரை கண்ட அந்த இரு உருவங்களும்... மாயா மற்றும் மோகினி ஒரே போல் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர்....

மேகலாயா : கூறுவதை கேள் மாயா.... அத்தான்களுக்கும் என் பிரபுவிற்கும் எங்களுக்கும் உதவி செய்.... எங்களின் சாபக்கட்டை அழித்த நீ... அதே போல் உம்மை அழித்தால் நாங்களும் அழிவோம் என்னும் வாக்கை அழித்திடு... என கூற...

மாயா : எம்மை அழித்தால் தாங்கள் இருவரும் அழிவர்... என்றது எழுதி வைத்த உயில் இல்லை தங்கையே.... கோவன்களிட்ட வாக்கு.... என கூற... அவளின் குரலில்... பாதி கோபமும்... மீது குரும்பும் இருந்தது....

மதுசூதனா : தங்கையா??? இவ்வழைப்பை கேட்டு எத்துனை யுகங்கள் கழிந்துவிட்டது... இத்திடீர் மாற்றத்தின் காரணம் என்ன??? அது மட்டமல்லமல்.... உம் குரலில் தெரியும் குரும்பு... இது எப்படி சாத்தியம்???

மாயா : ஒரு மாற்றமும் இல்லை தங்கையே.... எப்படியும் இன்னும் சில தினங்களிள் என் ஆருயிர் தங்கைகள் அழியப்போகிறீர்கள்... ஆதலால்... அதுவரை ஆசை தீற தங்கை என அழைத்துக் கொள்வேன் அல்லவா????

மேகலாயா : போதும் மாயா.... இகழாதே.... உம் மரணம் நெருங்கவில்லை... என்னும் அகம்பாவத்தில் பேசுகிறாயா???

மாயா : ஹாஹா...அகம்பாவமா??? வேறு வார்த்தை கிடைக்கவில்லையோ என் தங்கைக்கு... மீண்டும் கூறுகிறேன்.... மரணத்தை பற்றி துளியும் கவலை இல்லை எமக்கு.... உங்கள் மரணத்தை காண முடியாதே என்னும் சிறு ஏக்கம் இருந்தது... ஆனால்... இன்று அதுவும் மறைந்துவிட்டது... உங்கள் மரணத்தை யான் காணத்தான் போகிறேன்...

மதுசூதனா : அதையும் காணலாம் தமக்கையே... என கோபமாய் கூறிவிட்டு... மேகலாயாவுடன் அங்கிருந்து மறைந்தாள்....

தன்னை நிலை படுத்திக் கொண்ட மாயா... அமைதியாய் நின்ற மோகினியின் அருகில் சென்று... துருவனின் கேசத்தை வருடியவாறே....

மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)Where stories live. Discover now