காதல் - 18

964 43 20
                                    

மலையடிவாரத்தில் சினம் கொள்ளாமல் நடை பயின்றுக் கொண்டிருந்தாள் மோகினி.... துருவன் மிக மோசமான நிலையில் இருந்தான்... அவன் பெற்ற காயங்கள் அப்படி... குள்ளமானிடர்கள் பலர்... நரிகளாய் மாறி பலி வேட்டைகாய் காட்டிற்குள் அழைந்துக் கொண்டிருந்தனர்....

மோகினி : சுயசிந்தனை வேண்டாமா துருவா??? கோவன்கள் அவர்களின் அதே தோற்றத்தில் பிறப்பெடித்திருக்கும்... போது இளவரசிகள் அதே தோற்றத்தில் இருக்க மாட்டார்களா???

துருவன் : மன்னித்துவிடுங்கள் தாயே.... ருத்ரபோரில் மூவருமே இறந்துவிட்டனர் என்று அறிந்ததுமே அவர்களின் சக்திகளும் மறைந்ததென கேள்விப்பட்டேன்... ஆதலாலே இன்றும் அப்பெண்கள் இளவரசிகளாக இருக்க மாட்டார்கள் என்று தவறாய் எண்ணிவிட்டேன்...

முட்டாள் முட்டாள்.... மூடனாய் சிந்தித்துவிட்டு காரணம் கூறுகிறாயா??? இன்று கோவன்களின் சினத்திற்கு ஆலாகிவிட்டோம்... அவர்களின் சக்திகளை நினைவு படுத்த நீயே ஒரு வாய்ப்பை வகுத்து கொடுத்து விட்டாய்... முட்டாள் முட்டாள்.. என துருனை திட்டியவாறே வந்தது அந்த நிழல்களிள் ஒரு நிழல்...

கோபமுற்ற மோகினி....

மோகினி : போதும் நிறுத்திக் கொள்ளுங்கள்...தாங்கள் மூவரும் கூறியதாலே... துருவன் தவறு செச்தான்...?? தற்போது அவனே செய்ததை போல் கோள் மூட்ட வந்துவிட்டீர்கள்???

அந்நிழல் : நடந்தது நடந்துவிட்டது... நடக்கப்போவதை சிந்திக்கலாம்...

மோகினி : மற்றவர்கள் எங்கே.???

அந்நிழல் : மறுபிறவியை தேடி சென்றுள்ளனர்....நாளை நாங்கள் எங்கள் மறுபிறப்பான மனிதர்களை அடைந்துவிடுவோம்... ஏ குட்டிசாத்தானே.... சென்று வா...இங்கு நின்று எங்களை தொந்தரவு செய்யாமல்... என துருவனை இகழ....

நிமிர்ந்த மோகினியை பார்த்த துருவன்.... தலை குனிந்து வெளியேற போக....

மோகினி : நில் துருவா..... என்ற கட்டளையில் துருவன் அப்படியே நிற்க...

அந்நிழல் : என்ன மோகினி??? ஏன் அவனை நிற்க கூறுகிறாய்???

மோகினி : அவனுக்கு கட்டளையிட தாங்கள் யார்??? அவனுக்கு கட்டளையிடும் உரிமை எமக்கு மட்டுமே உண்டு.... நாம் என்ன பெ.பிதாய் செய்ய போகிறோம்?? அவன் நமக்கு தொந்தரவாக அமையும் வரை???

மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)Onde histórias criam vida. Descubra agora