மாலை மங்கும் நேரம்..
அந்தப் புகழ்பெற்ற மகளிர் கல்லூரி வாசலில், இறுதியாண்டு மாணவிகள்
தங்களது இறுதித் தேர்வை முடித்துவிட்டு, சந்தோசமும் துக்கமும் கலந்து முகத்திலும் உடையிலும் தோழிகளுக்கே தங்களை அடையாளம் தெரியாதது போல, வண்ணப் பொடிகளை பூசிக் கொண்டும் தோழிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டும் பிரியாவிடை கொடுத்துக் கொண்டிருந்தனர்..அதனை தூரத்தில், தங்களது மகிழுந்தில் அமர்ந்தவண்ணம் நண்பர்கள் இருவர் கவனித்தவண்ணம் இருந்தனர்..
அவர்களில் ஒருவன் பெயர் உதயன்..
இன்னொருவன் விசாகன்.. இருவருமே
வறுமை என்றால் என்னவென்றே
அறியாத மேற்தட்டு பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்கள் அணிந்திருக்கும் உடையும் அவர்கள் அமர்ந்திருக்கும் அந்த விலையுயர் மகிழுந்தே காட்டிக் கொடுத்தது.உதயன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறே " டேய் எவ்ளோ நேரம்டா வெட்டியா இங்கையே இருக்குறது.. எனக்கு மும்பைல மதியம் முக்கியமான மீட்டிங் இருந்துச்சு..நீ கூப்டனு ஒரே காரணத்துக்காக மட்டுந்தான் இருநூறு கோடி ரூபா பிசினஸ் டீல கேன்சல் பண்ணிட்டு வந்துருக்கேன்..ஆனா நீ என்னடான்னா இங்க, வந்த ஒரு மணி நேரமா எதுவும் பேசாம வழக்கத்துக்கு மாறா அமைதியாவே இருக்க " என சளித்துக் கொள்ள, அவனுக்கு தன் புன்னகையை பரிசளித்த விசாகன்,
" பொண்ணுங்க விசயத்துல நான் எப்படி? " என்றான்.
" என்னடா நான் இங்க காட்டுக் கத்தலா கத்திட்டு இருக்கேன்.. நீ முட்டாள்தனமா பேசிட்டு இருக்க"
" ம்ச்..கேட்டதுக்கு பதில் சொல்லு " என்று சொல்லும்போதே தங்கள் காரினை நோக்கி வந்த பெண்கள் கூட்டத்தைப் பார்த்து அவன் முகம் பிரகாசித்தது..

YOU ARE READING
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
Non-Fictionபிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா