உதயனிற்கு என்னவானதோ என்று பயந்து அவன் குடும்பத்தவர்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். வீரியம் குறைந்த மருந்து சிறதளவே சேர்க்கப்பட்டதால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.. வெறும் மயக்கம் மட்டுமே என மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில் உதயன் இருந்த அறையை நோக்கி விரைந்தனர்.
ஈஸ்வரியின் மனம் இன்னதென்று பிரித்தறியா சூழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது.
தனது தாயையும் தோழனையும் கண்டு படுத்திருந்த உதயன், எழுந்து தன் கேள்விகளுக்கு விடை அறிந்திடும் பொருட்டு " அம்மா இவுங்க என்னை மாதிரியே ஒருத்தர்தான் என்னை இங்க கூட்டிட்டு வந்து சேர்த்தாங்கனு சொல்றாங்கம்மா..யாரும்மா அவரு " என்று அருகில் நின்றிருந்த உத்ராவைக் காட்டி, கேள்வியை கேட்டு விட்டான் பட்டென்று..
" விசாகா சொல்லுடா..யார்டா அவுங்க " என்று வந்தது அவன் தந்தைதானா என உணர்ச்சி வசப்பட்டு மீண்டும் கேட்க, அங்கே மௌனமே ஆட்சி செய்தது..பதிலறியா கேள்விக்கு விசாகன் மட்டும் என்ன சொல்வான்.
உதயன் தாயை இறைஞ்சும் வண்ணம் பார்க்க, அவரோ பதில் சொல்ல முடியாமல் தலைையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டார்.
அங்கே அசாத்திய மௌனம் ஆட்சி செய்ய அதை கலைக்கும் விதமாக
" அவருதான் உங்கப்பா..வாசுதேவ மூர்த்தி.. " என்று இருபத்து மூன்று வருடம் மூடி வைத்த உண்மையை போட்டு உடைத்தார் மரகதம்..
அதைக் கேட்ட ஈஸ்வரி " அம்மா " என்று அலற, " என்னால முடியல பாஹீ.. அவர் யாருங்கற கேள்விக்கு பதில் சொல்லாம இருந்தா அது கடைசில எங்க வந்து நிக்கும் தெரியுமா.. உன்னோட நடத்தைல.. போதும் என் பொண்ணு புருசன் குத்துக்கல்லாட்டம் இருந்தும் இத்தனை வருசம் மூலியா இருந்தது.
பெத்த தகப்பன் உயிரோட இருந்தும் அந்தாள தண்டிக்கறனு தகப்பன் வாடையே காட்டாம
இந்தப் பிள்ளைய வளர்த்தது போதும்." என்றவர்
YOU ARE READING
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
Non-Fictionபிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா
