" ஏன் வாசு..நாம ஏன் ரோகிணிக்கும் விசுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க கூடாது? "
கேட்டுவிட்டு உன்னை நானறிவேன் என்பதை போல பார்த்து வைத்தார்..
வாசுவின் மனதில் இருந்ததைத் தான் பாஹீ கேட்டிருந்தாள்.. அவனுக்கு இதனை நேரடியாக கேட்பதற்கு இருந்த தயக்கம் பாஹீக்கு இல்லை.. தன் மனைவியை மெச்சுதலாய் ஒரு பார்வை பார்க்க, அவரும் வாசுவைத்தான் பார்த்திருந்தார்..
( ம்மா..நீங்களே பார்த்துட்டு இருந்தா எப்படி.. இந்த சின்ன சிறுசுங்களுக்கும் சான்ஸ் கொடுங்கப்பா )
" என்னப்பா சொல்றீங்க ரெண்டு பேரும்..ஒன்னும் அவசரம் இல்ல.. முடிவ நல்லா யோசிச்சு சொல்லுங்க " இருவருக்கும் நேரம் கொடுத்து ஒதுங்கிக் கொண்டார்கள்....இனி அவர்கள் பாடு..
ரோகிணிக்கும் விசுவிற்கும் உண்மையில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை..
விசாகனுக்கு ரோகிணியை பிடிக்கும்..
பிடிக்கும் என்றால் அவள் ராஜியின் ஏஞ்சல்.. நல்ல பெண்.. கள்ளம் கபடமறியா மனம் படைத்தவள் போன்ற காரணங்களால் தான்.. உண்மையில் சொல்லப் போனால் தனது அத்தை தனக்காக பெண் பார்த்து கட்டி வைப்பார்கள் என நினைத்துக் கொண்டு, அவன் எந்தப் பெண்ணையும் காதலிக்கும் எண்ணத்தில் பார்த்ததே இல்லை .. ரோகிணியை சின்ன வயதில் அழைத்தது போல ஏஞ்சல் என்று அழைத்தால், எங்கே அவளது திருமண வாழ்வில் பிரச்சனை வந்துவிடுமோ என்று தான் அவளை பெயர் சொல்லியே அழைத்தான்.. ஆனால் திடிரென்று, அவன் பாட்டிற்கு இருந்தவனுக்கு திருமண செய்தி சொன்னால் என்ன செய்வான் அவன்.. அதுவும் ரோகிணியை..
ESTÁS LEYENDO
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
No Ficciónபிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா
