நாட்கள் நகர்ந்தது. உதயனுக்கு நான்கு வயது..விசாகனுக்கு ஐந்து வயதும் ஆனது.
ராஜேஸ்வரி கல்லூரிப் படிப்பை முடித்திருந்தாள். நாகராஜன் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் முதல் வருடம் சேர்ந்திருந்தான். சுந்தரும் ரேவதியும் அருகிலுள்ள மருத்துவமனையில் பணிபுரிந்தனர். மாணிக்கம் படுத்த படிக்கையாக
பாஹி ஆலை பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். வாசு தற்போதும் பக்கத்து ஆலைக்குத் தான் சென்று கொண்டிருந்தான். சனி ஞாயிறு மட்டும் தங்கள் வீட்டிற்கு குடும்பத்தோடு சென்று
பருவதத்தைப் பார்த்து வருவார்கள். நாகராஜனுக்கு தன் தந்தையின் உடல்நலக்குறைவிற்கு காரணம் தனது உடன்பிறப்புகளே என நினைத்துக் கொண்டு அதிகம் யாரிடமும் ஒட்டாமலே இருந்தான் ராஜியைத் தவிர.. இருவருக்கும் வயது வித்தியாசம் குறைவு என்பதாலும் ராஜியின் அமைதியான குணத்தாலும் அவளை தன் அக்காவாக எண்ணாமல் தங்கை போல கவனித்துக் கொள்வான்.மற்றவர்களிடம் சற்று ஒதுங்கியே இருந்தான்.
அன்றொரு நாள் வாசு வெளியே சென்று வரும்போது ராஜி மாந்தோப்பில் இருந்து நடந்து வந்து கொண்டிருந்தாள்.. அவள் நடந்தே வீடு வந்தால் எப்படியும் இருட்டாகி விடும் என்பதால் அவளைத் தன்னுடன் அழைத்து வந்தான்.
அவன் வாசற்படியில் கால் வைத்ததுமே விச்சு " சூப்பர்மேன்.. " என்றபடி அவன் கால்களைக் கட்டிக் கொண்டான். உதயன் தாமதமாக வந்து " பா..பா... தூக்கு..தூக்கு " எனச் சொல்ல, முதலில் விச்சுவை ஒரு கையால் தூக்கி கொண்டு தயாவை இன்னொரு கையில் தூக்கிக் கொண்டான்.
" சூப்பர்மேன்.. மை மிஸ்...டிராயிங் சொல்லித் தந்திச்சு.. ' சூப்பர் விச்சு' உன்னை டிரா பண்ணிக் காமிச்சேன்னா . மிஸ் பாத்துட்டு விவி குட்டு சொன்னிச்சு " எனத் தன் கைகளில் வைத்திருந்த காகிதத்தைக் காட்டினான். அதில் வட்டமாக வரைந்த முகத்தில் மீசை மட்டும் பெரியதாக தெரிய, கீழே சட்டை வரைந்து அதற்கு கருப்பு வண்ணம் பூசியிருந்தான்.

BẠN ĐANG ĐỌC
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
Phi Hư Cấuபிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா