16.என்னைமறந்தாயோ கண்ணம்மா

1.6K 92 27
                                        

சூரியன் தன் பணியைத் துவங்கும் முன்னரே தனது பணியினைத் துவங்கிவிட்டார் பருவதம்.. பேரன் மருமகளுக்காய் நாட்டுக்கோழியை வாங்கி வரச் செய்தவர் அதனை பக்குவமாய் சமைத்து முடித்துவிட்டு ஆவி பறக்க சூடான இட்லிகளையும் சுட்டு எடுத்துவிட்டு, பேரனுக்காய் விறகடுப்பில் சுடுதண்ணீர் போட்டுவிட்ட பின்னரே அனைவருக்கும் காபி கலந்து கொண்டுவந்து எழுப்பி விட்டார், தன் மருமகளைத் தவிர..

காலையில் எழுந்ததும் கிழவி பாடும் சுப்பிரபாதம் ..(அதான் ரோகிணியை திட்டுவது) கேட்காமல் கிளம்பிவந்த ரோகிணி அவரின் ஓட்டத்தை சற்றே விரக்தியுடன் பார்த்துவிட்டு கோலமாவை
எடுத்துக் கொண்டு வாசலுக்குச் சென்றாள்.. அங்கு ஏற்கனவே பருவதம் சாணம் தெளித்து வாசலை கூட்டி வைத்து சென்றிருக்க, சின்னதாய் ஒரு கோலம் போட்டு விட்டு சென்று விடலாம் என்றிருந்தவளிடம் , வாசலில் வெறும் உள்பனியனும் வெள்ளை வேட்டியும் கட்டி, கையில் வேப்பங்குச்சியை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த உதயன் அவளிடம் சிநேகமாய் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு கோலமாவை வாங்கி கோலம் போட ஆரம்பித்தான்..

" அண்ணா.. கொடுங்கன்னா நானே போட்டுக்கறேன்"
" கையில தான் காயமா இருக்குல்லடா.. நீயேன் சிரமப்படற.. இன்னும் ஒரே நிமிசம்தான் " என்றவன் சரசரவென்று வாசலே நிரம்பிப் போகும் அளவிற்கு ரங்கோலியை வரைந்து விட்டான்..

அவன் கோலமிடும் அழகில் வியந்தவள்
" அண்ணா.. அப்பா கூட உங்கள மாதிரியே தான்னா நான் லேட்டா எழுந்துட்டா இதே மாறிதான் ஒரே நிமிசம்னு சொல்லிட்டு அவரே கோலம் போடுவாரு" என்றாள். ஆனால் அவன் அதற்கு ஒன்றும் சொல்லாமல் கோலடப்பாவை அவளிடம் கொடுத்துவிட்டு நகர,
" நீங்க அப்பா மேல இன்னும் கோபமாத்தான் இருக்கிங்களாண்ணா " என்க,

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)Место, где живут истории. Откройте их для себя