அரை மயக்கத்திலிருந்து தெளிந்த பாஹீ தன்முன்னே தனது நிலையை எடுத்துக் கூறிக் கொண்டிருந்த தேவாவை ஆழ்ந்து நோக்கினார்.. அவன் பேசியதும் அவர் காதில் விழுந்து கொண்டுதான் இருந்தது..
பாஹீயைக் கோபப்படுத்த தேவா என்கிற ஒரு வார்த்தை போதும் என்ற நிலையில் தேவாவே முன்னிருந்தால் அவரின் நிலையை சொல்ல வேண்டுமா என்ன.. கொலைகளை இவன் செய்யாது இருந்திருக்கலாம் ஆனால் அதனை மறைத்தது இவனது குற்றம்தானே.. அன்றே அவன் ரகுபதியை சிறைக்கு அனுப்பியிருந்தால் இத்தனை வருட பிரிவும் அவமானங்களாவது இல்லாமல் இருந்திருக்குமே.. ராஜியும் மனவிரக்தியோடு இறந்திருக்க வாய்ப்பில்லையே..
இவ்வாறு மயக்கத்தில் இருந்தபோது கூட வேலை செய்த மூளை, தேவாவை நேரில் கண்டதும் சண்டித்தனம் புரிந்து அனைத்திற்கும் இவன் ஒருவனே காரணம் என்று குற்றம் சுமத்த, ஆங்காரக் கோபம் கொண்டு தேவாவின் கழுத்தை தன் இரு கைகளால் நெருக்கிப் பிடித்தார்..
தேவா தடுக்காது அப்படியே இருக்க, ஒரு கட்டத்தில் மூச்சு விட சிரமப்பட்டு கண்கள் சொறுக ஆரம்பித்தது.. ரஞ்சித் சத்தம் கேட்டு வந்து தடுத்தும் அவரை தடுக்க முடியாது போக, வாசுவையும் பூர்ணிமா மேடமையும் அழைக்க விரைந்தான்..
அவர்களும் பதறியடித்துக் கொண்டு உள்ளே நுழைய, பாஹீ என்ன நினைத்தாரோ தேவாவை உதறித் தள்ளிவிட்டு வாசுவின் நெஞ்சில் தஞ்சம் புகுந்தார்..ரஞ்சித் தேவாவை தாங்கிக் கொண்டான்..
" வாசு..என்னால அவன கொல்ல முடியல வாசு.. என் கையால..நான் எப்படி.. ஒரு..உயிர..என்னால முடியலையே வாசு.. "
வாசுவின் நெஞ்சில் தலைவைத்து கதற ஆரம்பித்தார்..
" என்னால முடியல வாசு.. அவன கொல்ல முடியலையே.எனக்கு என்னமோ தலை பாரமா இருக்க மாதிரியே இருக்கு வாசு. "
பாஹீ பிதற்றிக் கொண்டே இருந்தார்..
வெளியே கரடுமுரடாய் தெரியும் பாஹீக்குள்ளே தான் தாய்மையின் மருஉருவமாய் ஈஸ்வரியும் குடியிருக்கிறார்.. அவரால் வாழ்ந்தவர்கள் தான் கோடி..வீழ்ந்தவர் யாருமில்லையே..
ESTÁS LEYENDO
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
No Ficciónபிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா
