உதயனும் வாசுவும் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்ல, அங்கே பாஹீ இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை.. வாசுவிற்கோ இனி அடுத்த தடவை பாஹீக்கு கோபம் வந்தால் அவரின் நிலை கவலைக்கிடமாகி விடும் என்று ரஞ்சித் கூறிய வார்த்தையே காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது..
அனைத்து பிரச்சனைகளும் முடிந்து சந்தோசமாக இருக்க வேண்டிய இந்நேரத்தில் பாஹீயின் உடல்நிலையால் துவண்டு போயிருந்தான்..
மகனுக்கு தந்தை ஆறுதல் சொல்வதா..தந்தைக்கு மகன் ஆறுதல் சொல்வதா என தெரியாமல் இருவரும்
துக்கத்தின் பிடியில் தங்களைப் பறிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.. அடுத்த அரை மணி நேரத்தில் விசாகன் பாஹீயை கையிலேந்தியபடி உள்ளே வர, இரஞ்சித் அவருக்கான மருத்துவ அறையை ஏற்பாடு செய்து முன்பு போல அவரது கைகளுக்கு விலங்கிட்டு தன் சிகிச்சையை ஆரம்பித்தான்..
வெளியே ரோகிணியும் சண்முகனும் வாசுவைக் கட்டிக் கொண்டு அழுது கொண்டிருந்தனர்..
" அப்பா எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா.. அம்மாக்கு ஒன்னும் ஆகாது தான "
" அம்மா திடீர்னு தேவா..ம்ம்.. தேவாவ கொல்லனும்னு கத்த ஆரம்பிச்சாங்கப்பா.. அவுங்க அவரையே அடிச்சிட்டாங்கப்பா "
அவள் பாட்டிற்கு புலம்பிக் கொண்டிருக்க, அப்போதுதான் விசாகனின் நெற்றியில் இரத்தம் வடிந்து காய்ந்திருப்பதைப் பார்த்தான்.. அன்று சுந்தர்..இன்று அவரது மகன் விசாகன் என பாஹீயின் கோபத்திற்கு பலியாகி போயினர்..
இரஞ்சித் அவரது மருத்துவ கோப்புகளை ஆராய்ந்துவிட்டு வெளியே வந்தான்.. அனைவரும் பதற்றமாக அவனைச் சூழ்ந்து கொள்ள,
" வாசு சார்.. நான் கடைசி தடவை சொன்னது போலதான் அவுங்க நரம்புகள்ல ஏற்பட்ட பாதிப்பால ஒன்னு அவுங்க கோமா ஸ்டேஜ்க்கோ..இல்ல புத்தி சுவாதீனம் இல்லாம போக நிறைய வாய்ப்பிருக்கு.. முன்னாடி அவுங்க கோபத்திலிருந்து வெளியவர காரணமா இருந்தது நீங்கதான்..ஏன்னா நீங்க அவுங்க குடும்பத்தையே அழிச்சதா நினைச்சாலும் அவுங்க உங்க மேல வெச்சிருந்த காதலால அவுங்க அந்த நிலைல இருந்து மீண்டு வந்தாங்க.. ஆனா இப்போ வாசுவும் தேவாவும் வேற வேறன்னு அவுங்க ஆள்மனசு ஏத்துக்கிச்சு.. இனி தேவாவ பாரக்கற வரை அவுங்க பழைய நிலைக்கு வரமாட்டாங்க"
VOUS LISEZ
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
Non-Fictionபிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா
