2.என்னை மறந்தாயோ கண்ணம்மா

2.1K 99 80
                                        

இரவு உணவை உண்டு விட்டு தனதறைக்கு செல்ல எத்தனிக்கும் போது சமையல் வேலை செய்யும் வாணி அவனருகே தயங்கிய வண்ணம் வந்து நின்றாள்.

" என்னக்கா எதும் வேணுமா " எனத் தன்மையாக கேட்க,

" விசுத் தம்பி.. சாயங்காலம் நீங்க கூட்டி வந்த பொண்ணு சாப்பிடாம அழுதுகிட்டே இருக்கு தம்பி.. அம்மா அந்தப் பொண்ண சாப்பிட வைக்கறது என் பொறுப்புன்னு சொல்லிட்டாங்க.. ஆனா அது கேட்க மாட்டிங்குது.. அம்மாக்கு தெரிஞ்சா என்னதான் திட்டுவாங்க தம்பி"

" வாணிக்கா..நான் பார்த்துக்குறேன்.. நீங்க சாப்பாட மட்டும் கொண்டு வந்து கொடுங்க" என்றவன் ரோகிணியை அடைத்து வைத்திருக்கும் அறைக்குச் சென்றான்.

அந்த அறையில் மின்விசிறியைக் கூட இயக்காது சன்னல்களும் அடைக்கப்பட்டு  காற்றோட்டமே இல்லாது இருந்தது.. அறையின் மூலையில் சுவற்றில் சாய்ந்தவாறு கண்கள் மூடி அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர் வந்த வண்ணம் இருந்தது.. அவள் தேம்பக் கூட இல்லை.. ஆனால் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது.

ரோகிணி..

அதிர்ந்து பேசத் தெரியாதவள்.

அதட்டி பேசினாலே அழுதுவிடும் இரகம்.

தேவாவின் பெண்ணா இவள் என்று இந்த இரண்டு மாதத்தில் பலமுறை எண்ணி  வியந்துள்ளான்.

இளகிய மனம் கொண்டவளை தனது சுயநலத்திற்காக காயப்படுத்துவது வருத்தமாக இருந்தாலும் அவள் தந்தைக்கு பாடம் புகட்ட இவளை வறுத்தித்தான் ஆக வேண்டும் என்பதால் பேச்சுக் கொடுத்தான்.

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)Where stories live. Discover now