கதிரவன் தன் ஆதிக்கத்தை செலுத்த துவங்கியிருக்க,அவனது சீற்றத்திற்கும் சற்றும் குறைவில்லாமல் பொங்கிய கோபத்தோடு தன்னைச் சுற்றி காவலாளிகள் துப்பாக்கியோடு ஆங்காங்கே நின்றிருந்தாலும் அதனை பொருட்படுத்தாது வீறு கொண்ட சிங்கமாய் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கம்பீரமாய் உள்ளே நடந்து வந்த வாசுதேவ மூர்த்தியைக் கண்டதும்,
அவனது கம்பீரத்தில் ஒரு நொடி வியந்துதான் போனான் தேவா..
நடுக்கூடத்தில் தேவா அமர்ந்திருக்க, உள்ளுக்குள் ஆயிரம் போராட்டம்.. தான் கொல்ல நினைத்த எதிரி..தன்னை தனியாளாக ஆக்கி தனது பெண்ணையும் தன்னிடம் இருந்து பிரித்த நயவஞ்சகன் தன்னை நோக்கி..தன் இருப்பிடத்திற்கே எந்தவித பாதுகாப்புமின்றி வந்திருக்கிறான்.. அவனை தன் கையாலே கழுத்தை நெறித்து கொன்று விட வேண்டும் என்ற கோபத்தீ அவனுக்குள் கொழுந்துவிட்டு எறிந்தது..
அதே சமயம் உதயன் கூற்றின்படி எதையும் அவனிடமே பேசிப் பார்த்துவிடலாம் என்றும் தோன்றியது..
ஆனால் அந்த எண்ணம் வாசுவை பார்க்காத வரை மட்டுமே .. வாசுவையும் அவனது கருப்புச் சட்டையையும் பார்த்ததுமே நேராக அவனது சட்டையைப் பற்றினான் தேவா.. வாசுவும் அதே கோபத்தில் தானே வந்திருந்தான்.. தனது சட்டையைப் பிடித்தால் சும்மாய் இருப்பானா.. அவன் கையை உதறிவிட்டு ஓங்கி அவனது மூக்கில் குத்திவிட்டு, இந்த முறை இறுக்கமாய் அவன் நகர்ந்து விடாதபடி தேவாவின் சட்டையை கொத்தாய் பிடித்தான்..
அவன் பிடியில் இருந்து மீளமுயற்சி செய்து கொண்டிருக்கும்போதே பாதுகாவலர்கள் வாசுவை சுற்றி வளைத்தனர்.. தேவா அவர்களை விலகியிருக்கும்படி கண்ணசைக்க அவர்களும் சற்று பின்தள்ளி நின்றனர்..
" என்ன வாசுதேவரே.. என் வீட்டுக்கே வந்து என்மேல கை வைக்கற அளவுக்கு துணிச்சல் வந்திடுச்சா..ஊரை விட்டு ஓடி ஒளிஞ்ச கோளை தான நீ "
அவன் முகத்தில் மீண்டும் ஒரு முறை குத்தியவன் " முதுகுல குத்துற துரோகிக்கு என்னை பத்தி பேச எந்த தகுதியும் இல்ல " வாசு
தேவாவின் சட்டையை விட்டு விட, அடித்த வேகத்தில் பின்னிருந்த சோபாவில் போய் விழுந்தான்..
ESTÁS LEYENDO
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
No Ficciónபிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா
