உதயன் திடீரென உத்ரா வரச் சொன்னதுமே அதில் ஆபத்து இருக்கும் என்று தெரிந்து அனைத்திற்கும் தயாராகித்தான் வந்திருந்தான்..
தேவா சரியாக வந்து சேரவும் மெதுவாக பதறாமல் பேச்சை ஆரம்பித்தான்..
" ஹாய் சார்.. வாட் அ பிளசன்ட் சர்பிரைஸ்.. " என சிரித்த முகமாக கை குலுக்க, அவனது கையை தட்டிவிட்டான் தேவா..
அவனது கோபத்தின் அளவு அதில் தெரிந்தது..
உதயன் சும்மா விடுவானா.. " ஏன் சார்.. உங்க ஸ்டாப் உத்ராவ எங்கூட பார்த்ததும் நான்தான் உங்க கம்பெனிக்குள்ள ஸ்பை வெச்சி காய நகர்த்தறேன்னு நினைச்சிட்டிங்களா..இல்ல நீங்க கோபப்பட வேற எதுவும் ரீசன் இருக்கா "
என்க,
" . சுமார்டா மூவ் பண்றீங்கனு நினைப்போ.. " என்றவன் உத்ராவிடம்
" இப்போ கூட நீ என் ஆபிஸ்ல ஸ்பையா வேலை செஞ்ச காரணத்துக்காக என்னால லீகலா ஆக்சன் எடுக்க முடியும் உத்ரா.. உன்னை மாறி ஆளுங்களால தான் நம்பிக்கை, விஸ்வாசம் அப்படிங்கற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாம போகுது .. ஆனா உன்னோட துடிப்பும் வயசும் இந்நேரம் எனக்கு பொண் குழந்தை இருந்திருந்தா உன்னை மாதிரி தான் இருந்திருக்கும் என்கிற காரணத்தால தான் நீ என்ன செஞ்சாலும் அமைதியா இருந்தேன்.."
அவள் பேசவில்லை.. என்ன இருந்தாலும் அவனுக்கு முதலாளி என்கிற வகையில் இவள் செய்தது தவறு தானே.. உதயனுக்கும் தேவா ஒன்றும் அவ்வளவு மோசம் இல்லை என்று தோன்றியதுதான்.. ஆனால் அவனிடம் உண்மையை வரவைத்தே ஆக வேண்டுமே..
أنت تقرأ
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
غير روائيபிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா
