இரயில் பயணம் என்றால் எப்போதும் குதூகலமாகிவிடும் உத்ராவிற்கு ஏனோ இந்தப் பயணம் இனிக்கவில்லை.. எதை நோக்கி செல்கின்றது அவள் வாழ்க்கை.. உதயனின் தவிப்பை காண முடியாது நொடியில் முடிவெடுத்துவிட்டாள்... ஆனால் அதனை எவ்விதம் செயல்படுத்துவது என்று அவளுக்கும் விளங்கவில்லை.. ஏதோ குருட்டு தைரியத்தில் தேவாவை உளவு பார்க்க செல்கின்றாள்.. திரும்பி உயிருடன் வருவாளா என்பதே சந்தேகமாய் இருக்க, அவளது காதலில் வெற்றி அடைவது சாத்தியமா.. அவளுக்கும் ஆசைதான் அவர்களோடு குடும்பத்தில் ஒருத்தியாய் வாழ, ஆனால் தேவாவை நெருங்க முடியாது என்று தெரிந்தும் தனக்கு கிடைத்த வேலை வாய்ப்பை பயன்படுத்தி உதவவில்லை என்றால் அந்தக் குடும்பத்தின் சந்தோசம் நிலைக்காது அல்லவா.. நான்கு வயதில்
தாய் தந்தையை விபத்தில் இழந்து தத்தளித்தவளுக்கு இருக்க இடமும் கொடுத்து சிறந்த கல்வி அறிவையும் கொடுத்தவர் ஈஸ்வரி.. இலட்சக்கணக்கானோர் நலவாழ்விற்கு அடித்தளமிட்டவரின் நன்மைக்காக தான் ஒருத்தி அழிவதில் எந்த தயக்கமும் அவளிடத்தில் இல்லை என்று அவள் மனம் அவளை சமாதனப்படுத்திக் கொண்டாலும் ஏனோ மனம் முழுதும் வெறுமையே மிஞ்சியது..அவள் வீட்டை விட்டு கிளம்பும் போது அவன் பார்த்த பார்வையின் அர்த்தம் என்ன.. என்னோடு இருந்துவிடு கண்மணி என கெஞ்சிய விழிகளை மறக்க முடியுமா அவளால்.. அவன் பேச்சில் சொல்லாவிட்டாலும் அவனது செய்கைகளும் பார்வையும் சொன்னதே அவன் என்னவன் என்று.. பேசாமல் அவனிடம் தன் காதலை தெரியப்படுத்தி விடலாமா என்கின்ற ஏக்கம் அவளை சூழ்ந்து கொள்ள, அவனை எப்போது மீண்டும் நேரில் பார்ப்பது, தன் காதலை அவனிடத்தில் சொல்வது என பெருமூச்சு ஒன்றினை விட்டாள்..
ஏன் இந்த கடிகாரம் கூட மெதுவாக சுற்றுவது போல தெரிகின்றது.... பேசாமல் வீடியோவை பார்வர்ட் செய்து பார்ப்பது போல நாட்களையும் நகர்த்திப் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. ஹூம்..இந்த நான்கு மணி நேரப் பிரிவையே தன்னால் தாங்க முடியவில்லை எனில் வரும் நாட்களை எப்படி கடத்துவேன்..தனக்கு அந்த அளவிற்கு காதல் பித்து பிடித்து விட்டதா.
BẠN ĐANG ĐỌC
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
Phi Hư Cấuபிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா