திருமணம் மற்றும் வரவேற்பை முடித்து, இரண்டு ஜோடிகளையும் தேனிலவுக்கு அனுப்பிவிட்டு பாஹீ பருவதத்தோடு பெரியகுளம் வந்தடைந்தான் வாசு.. நினைவு முழுதும் மகன்களும் மகள்களுமே நிறைந்திருக்க ஊரின் எல்லையை அடைந்ததுமே வெறுமை வந்து தாக்கியது..
அவர்களது வாகனம் ஊரின் எல்லையைத் தொட்டதுமே கண்டுகொண்டான் மக்கள் அலைஅலையாய் நகர்ந்து கொண்டிருப்பதை.. அவன் வீட்டை நெருங்கும் வரையிலும் மக்கள் கூட்டம் அலைமோத, பக்கத்து வீட்டு நாச்சியிடம் " என்ன தங்கச்சி.. ஒரே கூட்டமா இருக்கு " என்றான்..
அவனை ஏற இறங்கப் பார்த்து " ஏண்ணே..உனக்கு விசயமே தெரியாதா.. நம்மூருல விவசாயம் பண்ணாத தரிசா கிடந்த பத்து ஏக்கர் நிலத்தை எல்லாம் துரை அய்யா வாங்கி ஏதோ இயற்கை முறையில அதை சீர்செஞ்சு மறுபடியும் விவசாயம் பண்ண போறாங்களாம் " என்றாள்..
" அட நல்ல விசயமா இருக்கே..ஆனா எதுக்கு இவ்ளோ கூட்டம் "
" அண்ணே உங்க வீ்ட்டுக்கு வடக்க இருக்க நிலத்தையும் அவுங்க வாங்கி பெரிய பெரிய கட்டிடம்லா கட்டிப்புட்டாய்ங்கண்ணே.. துரையம்மா நம்மூருல இருக்க அத்தனை பேருக்கும் அங்கன தான் சாப்பிடனும்னு உத்தரவு போட்டாய்ங்க..அதானே நாங்கூட அங்கன போயி சாப்பிட்டு என்ட்ற வூட்டுக்காரருக்கும் வாங்கிட்டு போறேன்.. " என்றபடியே அவர் கடந்து போக, குழப்பத்துடனே வாசுவும் தங்கள் வீட்டிற்குள் சென்றான்...
" யாரு வாசு அது..துரைங்கறது "
" எனக்கு என்னடி தெரியும்..நானும் உங்கூடதானே இருக்கேன் " என்றவனது செவிகளில் ரோகிணியின் குரல் விழுந்தது.. மகள் ஞாபகத்தில் இருப்பதனால் வீட்டிற்கு வந்ததும் அவ்வாறு தோன்றுகிறது என நினைத்தவன் தன் கவனத்தை திசை திருப்பி பாஹீயை நோக்க அவரும் " வாசு பாப்பா குரல் மாறியே கேட்குது " என்றாள் சன்னலின் வழியே பக்கத்து வீட்டினை ஆராய்ந்தவாறு..
ESTÁS LEYENDO
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
No Ficciónபிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா
