3.என்னை மறந்தாயோ கண்ணம்மா

1.9K 104 80
                                        

அவன் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது என்று தான் போட்ட திட்டத்தால் அவனது உயிர் தன் கண் முன்னாலே சென்று கொண்டிருப்பதைக் காண முடியாமல் துடித்துப் போனாள் உத்ரா..  நல்லவன் என்று வேசம் போட்டு அப்பாவிப் பெண்களை ஏமாற்றி நாடு கடத்தும் எத்தனை செய்திகளை அவள் படித்து கொதித்திருப்பாள்.. அதில் தானும் ஒருத்தியாக மாறி விடுவோமோ என்கிற பயத்தில்தானே இந்த செயலை செய்தாள்..
தப்பிக்க தான் நினைக்கும்போது சரியெனப் பட்டது.. தற்போது பெருந்தவறாக தெரிந்தது.

அவனை முதன்முறை தங்களது ஆசிரமத்தில் பார்த்த போது, அவனது தாயின் மிரட்டலுக்கு தலையாட்டும் பொம்மையாக அவன் நின்ற கோலம்
கண் முன் வந்து போனது.. தனது தாயின் ஆணையை நிறைவேற்றுவதில் தான் அவனுக்கு எத்தனை ஆனந்தம். அவர் சொன்னதை செய்து முடித்த போது அவரின் ஒற்றை பாராட்டலுக்கு உலகையே வென்றது போல புன்னகைத்தானே.. அந்த சிரிப்பை இனி பார்க்க முடியாதா.. அய்யோ நான் ஒரு கொலைகாரியா.. என ஒரு நொடியில் என்ன என்னவோ நினைத்துவிட்டாள்.

கதவு திறக்கும் சத்தத்தில் பதறி எழுந்தவள் உள்ளே நுழைந்த தேவாவை கண்டு ஒரு நொடி திகைத்து பின்" அங்கிள்.. ப்ளீஸ் ஹாஸ்.பிடல் போகனும்.. இவருக்கு..நான் "
என பேச்சு வராமல் திக்க, நிலைமையை உணர்ந்தவன் உதயனைத் தூக்கிக் கொண்டு போய் தனது ஜீப்பில் ஏற்றி விட்டு உத்ராவையும் மறக்காமல் கூட்டிக் கொண்டு மருத்துவமனையை நோக்கி தன் வண்டியை மின்னல் வேகத்தில் செலுத்தினான்..

" அங்கிள் சாரி.. அங்கிள்.. தெரியாம தப்பு பண்ணிட்டேன்.. அவர காப்பாத்திடலாம் தான.. " என புலம்பியபடியே வந்தவளிடம் அவன் ஒரு வார்த்தை கூட உதிர்க்கவில்லை.. திரும்பித் திரும்பி உதயனையே பார்த்துக் கொண்டு வேகமாக வண்டியை ஓட்டினான்.

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)Место, где живут истории. Откройте их для себя