புகளூரிலிருந்து சுமார் ஐம்பது மைல் தொலைவில் உள்ள வெள்ளியணை தான் கருணாமூர்த்தியின் சொந்த ஊர். அவரது மகள் இந்திராணியைத் தான் வாசுவின் ஊரிலுள்ள இரகுபதி தனக்கு காதல் திருமணம் செய்துவைக்க வாசுவிடம் அழைத்து வந்தது..
ரகுபதியின் பார்வையே அவன் இந்திராணியை விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்த, இந்த திருமணத்தைத் தடுக்கும் பொருட்டு அவளுக்கு திருமண வயது இன்னும் வரவில்லை என அவனை திட்டி விட்டு, வாசுவே பொறுப்பாக அவளிடம் இரகுபதியைப் பற்றி எடுத்துக் கூறி கருணாமூர்த்தியிடம் ஒப்படைத்துவிட்டு வந்தான்..
கருணாமூர்த்தி பரம்பரைக் கோடீஸ்வரர்.. அவரது மகளைத் திருமணம் செய்து கொண்டால் பணக்காரனாகி விடலாம் என்ற அவனது கனவுக் கோட்டை வாசுவால் தரை மட்டமாக்கப் பட்டது..
அதனால் ஆத்திரமடைந்த ரகுபதி வாசுவிடம் வம்பிழுக்க, வாசுவிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டான்.. இதுவரை மட்டுமே வாசுவிற்குத் தெரியும்..ஆனால் அவன் தனக்கு கிடைக்க வேண்டிய இராஜ வாழ்க்கை பறிபோனதை நினைத்து வருந்தி, வேண்டுமென்றே அடியாட்களை கூட்டி வந்து அவனைத் தாக்க நினைக்க, அதற்கு முட்டுக் கட்டை வைத்தது பாஹீயின் பாதுகாவலர்கள்.. அத்தோடு மாணிக்கமும் இந்த விசயம் அறிந்து அவனை எச்சரித்து விட்டு சென்றார்.. அது அவர்களின் மீது பகை உணர்வை ஏற்படுத்தியது..
கருணாமூர்த்தியோ தன் மகளின் காதல் விசயத்தை அறிந்து அவள்மீது ஆத்திரத்தில் இருந்தார்.. இந்திராணி தனியாக இருக்கும் போது வீட்டில் நுழைந்த ரகுபதி அவளை திருமணம் செய்து கொள்ள மீண்டும் அழைக்க, வாசுவின் அறிவுரையின் படி அவள் மறுத்துவிட்டாள்.. கோபம் கொண்ட ரகுபதி அவளிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிக்க, அச்சமயம் கருணாமூர்த்தி வந்து தன் மகளைக் காப்பாற்றினார்.. தன் நோக்கம் பாழானதை எண்ணி ஆத்திரத்தின் உச்சியில் இருந்த ரகுபதி எதிர்பாரா சமயத்தில் இருவரையும் தான் கொண்டு வந்த கத்தியில் குத்தி கொன்று விட்டு, கத்தியில் தன் கைரேகையை அழித்துவிட்டு அதனை கருணாமூர்த்தியின் கையில் வைத்துவிட்டு தப்பித்து சென்றுவிட்டான்.
ESTÁS LEYENDO
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
No Ficciónபிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா