வயது பாதியாய் குறைந்தது போன்று இருந்தது பாஹீக்கு..
தங்களது குழந்தைகளின் திருமணத் தேதியே குறித்து விட்ட போதிலும் இளம்காதல் ஜோடிகளைப் போல, அவளுக்குப் பிடித்த புல்லட்டில் தன் மன்னவனோடு, நீண்ட நாட்கள் கழித்து பயணிக்கும் போது, உண்மையிலும் வயது குறைந்து தோற்றம் மறைந்து சுற்றுப்புறம் துறந்து வானில் பறப்பதைப் போலத்தான் இருந்தது மங்கையவளுக்கு..
இங்கே வயதும் அறிவும் கூட விடுமுறைக்கு சென்றுவிட்டன போலும் அவர்களது மகிழ்வினைப் பார்த்து..இங்கே வயதா முக்கியம்.. இவர்களது
காதலின் வயதுதான் கூட குறையாது அப்படியே இருக்கிறதே சிறிதும் தேய்மானமின்றி..கோடி மதிப்புக் கொண்ட குளுகுளு மகிழுந்தும் அவன் தோள்பற்றி அமர்ந்து கொண்டு தன்னவனின் மனையாள் என்ற பெருமையை ஊரறியச் செய்ய வைக்கும் இந்த புல்லட்டிற்கு ஈடாகிடுமா என்ன? செல்லும் பாதை இன்னும் நீளாதோ எனும் ரீதியில் பயணித்துக் கொண்டிருந்தனர் அவ்விருவரும்..
அவன் மட்டும் என்னவாம்..தேடிப் பிடித்து வாங்கி வந்தான் தன்னவளுக்கு பிடித்த புல்லட்டை..
அவனுக்கும் பிடிக்கும்தான்..ஆனால் வண்டியைப் பார்த்தாலே தன் காதல் கண்மணியின் நியாபகம் வந்துவிட, புல்லட்டிலிருந்து ஜீப்பிற்குத் தாவி இருந்தான் அந்த வண்டிக் காரன்..
அவர்கள் பிரிவுக்கு முன் கடைசியாக, பாஹீயின் மடியில் விச்சுவையும் வாசுவின் முன்னே உதயாவையும் வைத்து ஊரை வலம் வந்ததுதான் அவர்கள் பயணித்தது..
நல்லவேளை அன்றுபோல் இன்றும் அடம்பிடிக்க அந்த வால்கள் இல்லை..
அந்தக் குதூகலத்தில் தான் சந்தோசமாக கண்ணிற்கு கருப்புக் கண்ணாடியோடு பறந்து கொண்டிருந்தான் வாசு அவனது பச்சைக் கிளியோடு..ஈஸ்வரியம்மாவின் கணவர் விபத்தில் தப்பித்து இத்தனை வருடங்கள் கழித்து வந்து சேர்ந்துவிட்டார் என்று பத்திரிக்கை ஊடகங்களில் தெரிவித்திருந்தனர் வாசு பாஹீயின் புகைப்படத்தோடு..
உதயனை அச்சில் வார்த்தாற்போல் இருக்கும் வாசுதான் பாஹீயின் கணவர் என்பதை யாரும் ஏற்றுக் கொள்ள மறுக்கவில்லை.. அதுவும் ஈஸ்வரியின் ஒழுக்கத்தை குறை சொல்லும் தீய உள்ளம் யாருக்கும் இருந்ததில்லை..அது அவர்களது தொழில் எதிரிகளுக்கு கூடவும்தான்..
![](https://img.wattpad.com/cover/225511903-288-k874561.jpg)
ČTEŠ
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
Literatura faktuபிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா