மாலை நேரம் மாவிலை தோரணங்கள் மற்றும் பந்தலின் முன்புறம் வாழையிலை கட்டி இருக்க ரேடியோ ஒளிர வண்ண விளக்குகளால் சரவணன் வீடே அலங்கரிப்பப்பட்டு இருந்தது.
ஆட்கள் அனைவரும் வந்து கொண்டு இருக்க முன்னால் இருந்து வரவேற்றனர் சண்முகம்,சரோஜா தம்பதியினர்.
வெங்கடாச்சலம்,மதுரம்,ஆராதனா காரிலிருந்து இறங்க, "வாங்க ஐயா..!வாங்க அம்மா..!.."அவர்களை வரவேற்க, "என்னப்பா சண்முகம் பூ வைக்கிற விழாவை கல்யாணம் மாதிரி சிறப்பா பண்ணுற போல...?"என்றார்.
"ஆமா ஐயா..! ஒரே பொண்ணு அதான் அதுவும் இன்னைக்கே நிச்சியத்தையும் வைச்சிக்கலாம் சொல்லிட்டாங்க அதாங்க ஐயா...!"
"ஓ அப்படியா நல்லதுப்பா..."
அதே நேரம் சிவநாதன் குடும்பமும் வர அவர்களையும் வரவேற்க, "சரவணன் எங்க சித்தப்பா..?தாமரை உள்ளே இருக்காளா மாமா..." என்று தேன்மொழியும்,சக்தியும் கேட்டனர்.
"சரவணன் பின்னாடி எல்லாரும் சாப்பிடுறதுக்கு ரெடி பண்ணிக்கிட்டு இருக்கான் தாமரை உள்ளே இருக்காம்மா..."என்றார்.
உதட்டில் புன்னைகையுடன் அவனின் தாயிடம் தலையை ஆட்டியவாறு அவனது கலருக்கு பொருத்தமான பட்டு வேட்டி மெரூன் வண்ண சட்டையில் வந்த சக்தியை பார்த்த ஆரா இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தாள்.
ஆனால் அவனோ இவள் இருப்பதையே கண்டு கொள்ளதாவாறு சண்முகத்திடம் பேசியவன் பின்புறம் நோக்கிச் சென்றான்.
தேன்மொழி வந்து ஆராவை கூப்பிட இருவரும் தாமரை இருக்கும் அறையை நோக்கி செல்ல தோழிகள் அனைவரும் பேசிக்கொண்டு இருக்க ஆரா மட்டும் சக்தியின் நினைப்பில் இருந்தாள்.
டவுனுக்கு சென்ற போது கிளம்பும் வேளையில் தன்னிடம் பேசாதையும் இன்றும் தன்னை பார்க்காததையும் மனதிற்குள் நினைத்த ஆராதனா, சக்தி தன்னை தவிர்ப்பதாக மனதிற்கு தோன்ற கவலையுடன் அமர்ந்திருந்தாள்.
"மாப்பிள்ளை வீட்டுல இருந்து எல்லாரும் வராங்க...."என குரல் கேட்க வேகமாக சுந்தரை பார்க்க ஜன்னல் அருகே சென்றாள் தாமரை.
YOU ARE READING
உன் அன்பில் உன் அணைப்பில்..!
Non-Fictionஇது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.