அத்தியாயம் 28

2.6K 170 50
                                    

சக்தி ஆராதனாவை பற்றி ரஞ்சித் கூறியதை நினைத்துக் கொண்டு ஹாலில் அமர்ந்திருந்த தேன்மொழியின் அருகில் சாப்பிட்டு முடித்து வந்து அமர்ந்தான் சக்திவேல்.

"என்ன தேன்மொழி ரொம்ப சந்தோஷமா இருக்கே இப்போயெல்லாம்..?எனக்கு தெரியாம அந்த ரஞ்சித்தை கல்யாணம் பண்ணிட்டையா என்ன..?"என்று கிண்டலாக வினவினான்.

"அத்தான் நீ ஏதாவது என்கிட்டே சொல்லாம மறைச்சிருக்கைய்யா..?"

அவனது இந்த கேள்வியில் ஒரு நொடி தயங்கியவன் பின், "இல்ல தேன்மொழி..?ஏன் கேட்குற..?"என்றான்.

"சரி யாரையாவது நீ லவ் பண்ணுறையா அத்தான்..?"

"ஏன் தேன்மொழி நான் அம்முவை லவ் பண்ணுறது தான் உனக்கு தெரிஞ்சிருச்சில இப்போ..?அப்பறம் ஏன் சுத்தி வளைச்சி பேசுற..?"

"என் கிட்ட பேசாதே அத்தான் நீ ஏன் உங்க ரெண்டு பேரோட லவ்வை என்கிட்டே என் சொல்லல..?"என்று கோபமாக கேட்க,

"ஓஹோ நீ முதல உன் லவ்வை சொன்னையா என்கிட்டே. நீ சொல்லலை அதுனால நானும் சொல்லல..."

"போ அத்தான் உன் முன்னாடி தானே அன்னைக்கு ரஞ்சித் காதலை சொன்னாரு ,நீங்க ரெண்டு பேரும் தான் சேர்ந்து என்னை ஏமாத்திட்டீங்கா இனிமே என்கிட்ட பேசாதே அத்தான்..."என கூறியவாறு கோபமாக எழுந்துச் சென்றாள்.

அவள் பின்னால் சென்றவாறு சிறிது நேரம் மன்னிப்பு வேண்ட அதன் பின்னே அமைதியானாள்.

"சரி அத்தான். நீ ஆரா கிட்ட இதை பத்தி பேசாதே. நீ தான் ஏமாத்திட்டே அவளாவது சொல்லுறாளான்னு பார்க்கலாம்..."என கூறியவாறு தன் அறைக்கு தூங்கச் சென்றாள்.

"என்ன இது இவ இப்படி சொல்லிட்டு போற இது மட்டும் அம்முக்கு தெரிஞ்சது,அவ உன்கிட்ட சவால் விட்டுருக்கா இதை ஏன் என்கிட்டே சொல்லலை கேட்டா அப்பறம் நம்ம நிலைமை..." யோசனையுடன் அப்படியே சோபாவில் அமர்ந்தான் சக்திவேல்.

ஊருக்குள் திருவிழா தொடங்குவதற்க்கு ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற முளைப்பாரிக்கு தேவையான பொருட்களை டவுனுக்கு சென்று வாங்குவதற்கு ஆராதனாவை அழைக்க மதுரம் பாட்டியின் வீட்டுக்கு வந்தாள் தேன்மொழி.

உன் அன்பில் உன் அணைப்பில்..!Onde histórias criam vida. Descubra agora