அத்தியாயம் 10

3.4K 191 54
                                    

தன் அறையை விட்டு வெளியே வந்த தேன்மொழியை அழைத்த மரகதவள்ளி பாட்டி.

அவர் அழைத்ததை கண்ட தேன்மொழி, "இது என்ன இந்த பாட்டி புதுசா பாசமா கூப்பிடுது என்ன வேலை சொல்லப் போகுதோ..."நினைத்தவாறு அருகில் வந்தாள்.

"இப்படி உட்காரும்மா தேன்மொழி சாப்பிட்டியா காலையிலே எங்கையோ கிளம்பிட்டே போல..."எனக் கேட்டவாறு தன் அருகில் அவளை அமர வைத்தார்.

"பாட்டி மணி பதினென்னு இது உங்களுக்கு இப்போ தான் விடிச்சிருக்குன்னு நினைப்பா..."

"மணியை பார்க்கல தேன்மொழி என்னம்மா தலையில பூ வைக்காம இருக்கே..?"

"என்ன இந்த பாட்டி இவ்வளோ அமைதியா பேசுது ஏதோ பெரிய வேலை சொல்ல போகுது..."மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அருகில் இருந்த பூவை எடுத்து அவளது கூந்தலில் வைத்து விட்டார்.

"இப்போ பார்க்க எவ்வளோ அழகா இருக்கே தெரியுமா...?"என கூறியவாறு அவளுக்கு திருஷ்டி கழித்து விட இதற்கு மேல் முடியாது பொறுமை அனைத்தையும் இழந்தாள்.

"பாட்டி போதும் உங்க பாசம். என்ன வேலை செய்யணும் சொல்லு ரொம்ப பாச மழை பொழியாதே..."என்றாள்.

"ஆசையா பாசமா பேசுனா இப்படி சொல்லுற..."

"நீங்க என் கிட்ட..! இதை நான் நம்பணும். சொல்லுங்க என்ன வேலைன்னு இல்லைன்னா நான் போறேன்..."

"அப்படி எங்கே போகப் போற...?"

"நான் எங்க போன உங்களுக்கு என்ன அப்படியே அதை எங்க வீட்டுல போட்டு தரவா..."

"ஏன்டி இப்படி சண்டை போட்டுகிட்டே இருக்கே..."

"நான் உங்க கூட சண்டை போடுறேனா சும்மா தான் இருந்தேன். நீங்களா கூப்பிட்டு பாசமழை பொழிஞ்சி இப்போ சண்டை போடுறேன்னு சொல்லுன்னா என்ன அர்த்தம்..."

"சரி சரி சொல்லுறேன் இந்த ரஞ்சித் பையன் எங்கே இருப்பான்னு தெரியுமா..?"

"உங்க பேரன் எங்கே இருப்பான்னு எனக்கு என்ன தெரியும்..."

"நீ மட்டும் தான் அவன் கிட்ட நல்லா பேசுவ ஒரு போன் பண்ணி கேளேன் அவன் எங்கே இருக்கான்னு..."

உன் அன்பில் உன் அணைப்பில்..!Tempat cerita menjadi hidup. Temukan sekarang