வீட்டு முற்றத்தில் அங்கும் இங்கும் நடந்து கொண்டு வாசலை பார்த்தவாறு இருந்த தேன்மொழியை சேரில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்த மரகதவள்ளி பாட்டி பார்த்துக் கொண்டிருந்தார்.
"ஏன்டி எதுக்கு இப்படி அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துக்கிட்டு இருக்கே அதுவும் வாசலை வேற அடிக்கடி பார்த்துகிட்டு இருக்கே..?"
"அத்தான் சிவரஞ்சினி அக்காவை கூப்பிட போய் எவ்வளோ நேரமாச்சி ஆனா இன்னும் காணும்..."
"ஏடி லூசு இப்போ தான் ட்ரையினே வந்துருக்கும் அவங்க வர இன்னும் நேரம் இருக்குடி..."என்று பாட்டி கூற முகத்தை சுளித்தவாறு தன் அத்தையை தேடிச் சென்றாள் தேன்மொழி.
"பாரு அத்தை இந்த பாட்டியை நான் அக்காவுக்காக எவ்வளோ நேரமாக காத்துகிட்டு இருக்கேன் உன் மாமியார் என்னை திட்டிகிட்டே இருக்கு..."என்று எரிச்சலுடன் கூற ,
"தேன்மொழி சிவரஞ்சினியை அக்கான்னு கூப்பிடாதே சொல்லியிருக்கேன்ல. ஒன்னு மதினி கூப்பிட்டு இல்ல அண்ணி கூப்பிட்டு அதை எல்லாம் விட்டுட்டு அக்கான்னு கூப்பிடுற..."
"என்னால முடியாது சின்ன வயசுல இருந்து சிவரஞ்சினியா அக்கா தான் கூப்பிட்டேன் இப்பவும் அப்படி தான் கூப்பிடுவேன்..."
"அப்படின்னா சக்தியை எப்படி நீ..."என்று கேட்டுக் கொண்டிருக்க வாசலில் கார் சத்தம் கேட்டதும் வேகமாக சென்றாள் தேன்மொழி.
காரினை விட்டு இறங்கிய சிவரஞ்சினியை(சக்தியின் தங்கை) கண்டதும் அக்கா என்றவாறு ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள்.
"ஹே தேன்மொழி எப்படி இருக்கே..? நீ இங்கே தான் இருக்கேன்னு அம்மா சொன்னாங்க, போன்னே பண்ண மாட்டிங்கிற...?"
"நான் நல்லா இருக்கேன் அக்கா நான் போன் பண்ணும் போதெல்லாம் நீ பிஸியாவே இருக்கே..."
"நாங்களும் இங்கே இருக்கோம்..."என்று கையில் ஒன்றை வயது சிறு குழந்தையை வைத்தவாறு கூறினான் ரஞ்சினியின் கணவன் வினோத்குமார்.
![](https://img.wattpad.com/cover/123464071-288-k297950.jpg)
ESTÁS LEYENDO
உன் அன்பில் உன் அணைப்பில்..!
No Ficciónஇது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.