அத்தியாயம் 11

3.3K 186 60
                                    

தன்னை யாரோ அடித்ததும் கோவமாக திரும்பியவன் அங்கே தேன்மொழி கோபத்தில் பத்திரகாளியை நிற்பதை கண்டான்.

"இந்த காலத்து பொண்ணுங்க நீ இடிச்சதும் அமைதியா போயிடுவாங்கன்னு நினைச்சய்யா...? இடிச்சது இல்லாம என்ன பண்ணுவேன்னு கேள்வி வேற கேட்குறையா..? என்ன பண்ணுவேன்னு காட்டுறேன் வா..."என்றவாறு அவனின் சட்டையை பிடித்து இழுத்து கீழே அழைத்து வந்தாள்.

"தேன்மொழி என்ன பண்ணுற விடு அந்த பொறுக்கியை. அவன் கூட நமக்கு எதுக்கு வம்பு வா போகலாம்..."ஆராதனா தடுக்க முயல,

"நீ சும்மா இரு ஆரா இவனை இப்படி விட கூடாது..."என்றதும், "என்னாச்சு பாப்பா ஏதாவது பிரச்சனையா..?" என்றவாறு தன் தந்தைக்கு தெரிந்த அங்கே வேலை செய்யும் பணியாள் ஒருவர் வந்தார்.

"ஆமா அண்ணா..." என்று இதுவரை நடந்த அனைத்தையும் கூற, "நீங்க போங்க நாங்க பார்த்துக்குறோம்..."என்றார் வந்தவர்.

"சரி அண்ணா..."என்றவாறு அவனை விடுவித்தவள் தான் வாங்கிய உடைகள் அனைத்தையும் பில் போட்டு கடையை விட்டு வெளியேறினர் இருவரும்.

கடையை விட்டு வெளியே வந்த ஆரா, "ஏன் தேன்மொழி இப்படி பண்ணுனே அவனால ஏதாவது பிரச்னை வந்தா..?" கேட்க,

"பிரச்சனைக்கு பயந்துட்டு அவனை இப்போ சும்மா விட்ட அவன் திரும்பவும் வேற பொண்ணுங்க கிட்ட இப்படி தான் நடந்துக்குவான்..."கத்தினாள் தேன்மொழி.

"இந்த டிரைவர் அண்ணா வேற காணும் எங்கே போனாங்ளோ போன் பண்ணி கேளு தேன்மொழி..."என்றாள் ஆராதனா.

டிரைவரை அழைக்க போனை எடுக்க, "தேன்மொழி இங்கே என்ன பண்ணுற..?"என்று யாரோ தன்னை கூப்பிட திரும்பியவள் அங்கே தன் கல்லூரி தோழி பிரியா தன்னை நோக்கி வருவதை கண்டாள்

"கையில இருக்குறத பார்த்த தெரியலையாடி உனக்கு..."

"ஓ நீயும் டிரஸ் எடுக்க தான் வந்தையா..? நானும் அதுக்கு தான் வந்தேன் இனிமை தான் எடுக்கணும்.."

"ம்ம்ம் சரி.."

"ஏதாவது விசேஷமா உங்க வீட்டுல..?ஆமா இவங்க யாரு..?"ஆராவை பார்த்து கேட்க,

உன் அன்பில் உன் அணைப்பில்..!Onde histórias criam vida. Descubra agora