அத்தியாயம் 21

3K 185 56
                                    

நாட்கள் அழகாகச் சென்று கொண்டு இருக்க கோழிப்பண்ணை,பால்பண்ணை,ரைஸ் மில் என்று தன் முழு கவனத்தையும் தொழிலில் செலுத்தினான் ரஞ்சித்குமார். அதே நேரம் தேன்மொழியோ ரஞ்சித்தின் நினைவுகளுடன் தன் படிப்பில் கவனத்தை செலுத்த முடியாமல் தடுமாறினாள்.

சக்தியும் காம்ப்ளக்ஸ் கட்டுவதில்,ட்ராவெல்ஸை கவனிப்பதில்,மேலும் மேலும் தன் தொழிலை பெருக்குவதில் கவனமாக இருந்தாலும் தினமும் ஒரு முறையாவது அம்முவை காண்பது மொபைலில் பேசுவதை மறக்காமல் கடைபிடித்தான்.

இதற்கிடையில் சுந்தர்,தாமரையின் திருமண நாள் வந்தது.

"அத்தே..!அத்தே..! கிளம்பிட்டீங்களா நேரமாச்சு...."என அழைத்தவாறு அரக்கு பட்டு புடவையில் தன் அறையை விட்டு வெளியே வந்தாள் தேன்மொழி.

"கிளம்பிட்டேன் தேன்மொழி என் மருமக பார்க்குறதுக்கு எவ்வளோ அழகா இருக்கா..?என் கண்ணே பட்டுடும் போல இருக்கு..."எனக் கூறியவாறு அருகில் இருந்த மல்லிகை சரத்தை எடுத்து அவள் தலையில் சூடினார் பார்வதி.

"அடடா யார் இது என் பொண்ணா நம்பவே முடியல..."கூறியவாறு வீட்டுக்குள் வேல்முருகன் நுழைய தன் அப்பாவை கண்டதும் சந்தோஷத்தில் ஓடிச் சென்று கட்டிக்கொண்டாள் தேன்மொழி.

"அப்பா நீங்க வரேன்னு சொல்லவே இல்லை...?"

"உனக்கு அதிர்ச்சி தரணும் தான் சொல்லலை. இந்த புடவையில உன்னை பார்க்கும் போது பெரிய பொண்ணா இருக்கே ஆனா அப்பான்னு சொல்லி ஒடி வந்து என் மேல சாயும் பொழுது சின்ன பொண்ணா இருக்கே...என் செல்ல பொண்ணுடா நீ...."என கூறியவாறு தன் மகளை அணைத்துக் கொண்டார் வேல்முருகன்.

"வாங்க அண்ணா..?வீட்டுல எல்லாரும் நல்லாயிருக்காங்களா..?அண்ணி வரலையா..?"

"நல்லா இருக்கோம்மா நான் மட்டும் தான் வந்தேன் கிளம்பிட்டீங்களா எல்லாரும் போகலாமா கல்யாணத்துக்கு..?"

"அப்பா உங்ககிட்ட கல்யாணத்துக்கு சொன்னாங்களா சண்முகம் மாமா..?"என்று தேன்மொழி சந்தோஷமாக கேட்க,

உன் அன்பில் உன் அணைப்பில்..!Tempat cerita menjadi hidup. Temukan sekarang