சுற்றி இருப்பவர் யாரையும் பார்க்காமல் தன் முன் இருக்கும் எதிரியின் கம்பு வீச்சின் தாக்கத்திற்கு ஏற்றவாறு தன் திறமையால் அவனை வெல்வதற்கு முயன்று கொண்டிருந்தாள் தேன்மொழி .
இருவரும் ஒருவரை ஒருவர் விடாது போட்டி போட்டு கொண்டிருக்க இறுதியில் தன் எதிரியின் கம்பு கீழே விழ தன் வீச்சினை நிறுத்தினாள் .
"பரவாயில்லை தேன்மொழி,கொஞ்ச நாள்ல நல்லா கத்துக்கிட்டையே..."
"அப்படியெல்லாம் இல்ல அண்ணா. தாத்தா சொல்லி கொடுத்ததால தான் நல்லா கத்துகிட்ட அவ்வளோ தான்..."
"அப்போ நான் நல்லா கத்துக்கிடலேன்னு சொல்லுறேயா... "
"பரவாயில்லைண்ணா உனக்கு கூட கொஞ்சம் அறிவிருக்கு..."என கூறிய தேன்மொழி திரும்பி பார்க்க நந்து வருவதை கண்டாள்.
"சரி நான் போய்ட்டு வரேன் ரொம்ப நேரம்மாச்சி வீட்டுல தேடுவாங்க தாத்தா. எனக்கு நாளைக்கு இதை விட இன்னும் அதிகமா சொல்லித் தாங்க..."என்றாள் தேன்மொழி.
"அத்தை நீ சூப்பரா சுத்துனா தெரியுமா. நானும் பெரிய பையனா ஆனதும் எனக்கு சொல்லி கூடு... " என்று தன் அண்ணணின் மகன் நந்து கூற,
"டேய் அப்பா நல்லா சுத்தலையாடா... " இதுவரை தன் தங்கைக்கு போட்டியாய் சண்டையிட்டுக் கொண்டிருந்த தன் மகனிடம் கேட்டான் தமிழரசு.
"ஆமாப்பா உன்னை விட அத்தை தான் நல்லா சுத்துச்சு..."
"சரி நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போங்க. நீ இங்கே வந்தது அம்மாக்கு தெரிஞ்சாலே என்னையும் சேர்த்து திட்டுவாங்க. அப்பறம் வீட்டுல பெரிய போர்ரே நடக்கும். நான் வந்து விடணுமா இல்ல நீங்க ரெண்டு பேரும் போயிருவீங்களா..."தன் மகன் மற்றும் தங்கையை கண்டு கேட்க,
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தவாறு தமிழரசிடம் நாங்களே போயிருவோம் என்று இருவரும் ஒரே போல் கூறினர்.
"என்னமோ பண்ணுங்க நான் சுகர் பேக்டரி வரை போய்ட்டு வரேன்..."என கூறியவாறு காரில் ஏறிச் சென்றான் தமிழரசு.
VOUS LISEZ
உன் அன்பில் உன் அணைப்பில்..!
Non-Fictionஇது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.