குரல் வந்த திசையில் திரும்பிய மூவரும் அங்கே சக்தி கோபத்தில் உச்சத்தில் இருந்ததை கண்டனர்.
தேன்மொழியை அடித்த ரஞ்சித்தை கண்ட சக்தி வேகமாக அவனை நெருங்கி வந்து அவனது சட்டையில் கை வைக்க இதை எதிர்பார்க்காத ஆராதனாவும், தேன்மொழியும் திகைத்து நின்றனர்.
"என்ன தைரியம் இருந்தா நீ அவளை அடிச்சிருப்பே..?உன்னை..."என்றவாறு அவனது கழுத்தை பிடித்து நெறிக்க இதை எதிர்பார்க்காத ரஞ்சித் அவனை தன்னிடம் இருந்து விலக்க சக்தியின் பிடி இறுகியது.
சக்தியின் செயலில் கோபம் கொண்ட ரஞ்சித் தன் கையால் அவன் கழுத்தை நெறிக்க தேன்மொழியும் ,ஆராவும் இருவரும் சேர்ந்து விலக்கப் போராட அது முடியாமல் போக இருவரின் கோபம்,வன்மம்,சண்டை அதிகரித்துக் கொண்டே இருந்தது.
இதை பார்த்த தேன்மொழி, "சக்தி அத்தான் விடுங்க..."கத்தியவாறு சக்தியை பிடித்து தள்ள முயல,
"நீ போ தேன்மொழி.."என்று அவளை தள்ளியவள், "நீ யாருடா அவளை அடிக்கே..?அவ எங்க வீட்டோட செல்லப் பொண்ணுடா. நாங்களே அவளை அடிச்சதுதில்லை. என்ன தைரியம் இருக்கும் உனக்கு..."என்க,
"உங்க வீட்டுல யாரும் அவளை கண்டிக்காதனால தான் அவளோட விளையாட்டு புத்தி அவளை இங்க கொண்டு வந்து விட்டுருக்கு அதான் அவளை அடிச்சேன். முதல்ல என்ன நடந்தது தெரிஞ்சிக்கோ. அது என்னன்னு தெரியாம என்கிட்டே சண்டைக்கு வராதே..?" கோபமாக கூறினான் ரஞ்சித்குமார்.
"என்ன நடந்தாலும் இருக்கட்டும். அவளை கண்டிக்க நீ யாருடா உனக்கு என்னை உரிமை இருக்கு..?" சக்தி சொல்லி முடிப்பதற்கு முன்,
"அவ என் பொண்டாட்டிடா நான் அவளை விரும்புறேன். அவளை தண்டிக்கிற எல்லாம் உரிமையும் உன்னை விட எனக்கு தான் இருக்கு போதுமா..?"என கூற அதை கேட்ட சக்தியை விட தேன்மொழியே திகைப்பின் உச்சத்தில் இருந்தாள்.
"என்னடா சொன்ன அவ உன் பொண்டாட்டியா. நீ அவளை விரும்பிறையா..? டேய் உன்னை..."கோபமானவன் மறுபடியும் ரஞ்சித்தின் கழுத்தை நெறிக்க அதுவரை அமைதியாக இருந்த ஆராதனா சக்தியை பிடித்து விளக்கினாள்.
YOU ARE READING
உன் அன்பில் உன் அணைப்பில்..!
Non-Fictionஇது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.