ஆராதனா தன் காதலை சக்தியிடம் கூறுவதற்கு முன் தன் தந்தையிடம் கூற முடிவெடுத்து வாய் திறந்த நொடி கீழே யாரோ அம்மாஆஆஆஆ என்று அலறும் சத்தத்தில் கீழே விரைந்தனர்.
இருவரும் கீழே வேகமாக இறங்கி வர படி அருகே தலையில் ரத்தம் கொட்ட மயங்கி கிடந்த சாரதாவை கண்டு அவள் அருகில் சென்றனர்.
"ஐயோ..!சாரதா எழுந்திருமா என்னாச்சும்மா ஐயோ..!இப்படி ரத்தம் வருதே..."என்று செண்பகம் புலம்ப கொண்டிருக்க,
"என்னாச்சும்மா. சித்தி எப்படி விழுந்தாங்க...?"
"மாடிக்கு போறேன் சொல்லிட்டு போனா...."என்று கூற,
அதே நேரம் அங்கே வந்த கௌதம் தன் தாயின் நிலையை கண்டு, "அம்மாஆஆஆ....! அக்கா அம்மாக்கு என்னாச்சு..? ஏன் ரத்தம் வருது அம்மா என்னை பாரும்மா..?"என்று அழுது கொண்டே கத்தினான் கௌதம்.
"கௌதம் அம்மாக்கு ஒன்னும் ஆகாது. இப்போ ஹாஸ்பிடல் போயிரலாம்..."என்று வாசுதேவன் கூற, "டிரைவர் அண்ணா காரை எடுங்க..."என கத்தினாள் ஆராதனா.
ஹாஸ்பிடல் அழைத்து சென்று ஐ சி யூ அட்மிட் பண்ணி சாரதாவுக்கு டிரீட்மென்ட் நடைபெற வாசுதேவன் வசந்த்திற்கு (கௌதம் தந்தை) போன் பண்ணி செய்தியை கூறினார்.
செண்பகம் தன் தங்கையை நினைத்து அழுது கொண்டு இருக்க ஆராதனாவோ கௌதம் ஆறுதல் கூறி கொண்டு இருந்தாள்.
"செல்லம் அழாதடா அம்மாக்கு ஒன்னும் ஆகாது..."என்று தன் மடியில் படுத்து அழுது கொண்டு இருந்த கௌதமின் தலையை வருடியவாறு கூற வேகமாக மடியிலிருந்து எழுந்தவன் அவள் முகத்தை பார்க்க அவனை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து டாக்டர் வெளியே வர, "டாக்டர் என் தங்கச்சிக்கு எப்படி இருக்கு..?"என்று செண்பகம் வேகமாக கேட்க,
"உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை அவங்க கால் ஸ்லிப் ஆனதுனால கால்ல அடிபட்டுருக்கு. அப்பறம் நெற்றி தரையில முட்டுனதால கான்சியன்ஸ் இல்லாம இருக்காங்க ரெண்டு மூணு நாளாகும் கண் விழிக்க..."
YOU ARE READING
உன் அன்பில் உன் அணைப்பில்..!
Non-Fictionஇது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.