அறைக்குள் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்த மருதுவை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் பிரகாஷ்.
"டேய் மச்சான் ஏன்டா இவ்வளோ கோபமா இருக்கே..?"
"எனக்கு வர கோவத்துக்கு அந்த ரஞ்சித்தையும்,சக்தியும் கொல்லணும் தோணுதுடா பிரகாஷ்..."
"அப்படி என்னடா பண்ணுனாங்க அவங்க ரெண்டு பெரும்..."
"இந்த சக்தி என்னடானா ரேஷன் கடைக்கும்,சொஸ்சைடிக்கும்(வேளாண் தானியங்கு கூட்டுறவு வங்கி) ரெய்டு வர வச்சி என் அப்பாவை ஜெயிலுக்கு அனுப்புனான் ரஞ்சித் என்னடானா பெரிய காதல் மன்னன் மாதிரி நம்ம செல்வா லவ் பண்ணுன பொண்ணை அந்த சுந்தருக்கு கல்யாணம் பண்ணி வச்சான்டா..."
"என்னடா மச்சான் சொல்லுற உங்க அப்பா ஜெயிலுக்கு போனதுக்கும்,செல்வா தாமரையை கல்யாணம் பண்ணாததுக்கும் இந்த சக்தியும்,ரஞ்சித்தும் காரணமா..?"
"டேய் எருமை எவ்வளோ நேரமா அதத் தானடா சொன்னே..."என்றவனோ கோபத்தில் சோபாவில் அமர்ந்திருந்த பிரகாஷை போட்டு அடித்தான்.
அதே நேரம் அங்கே வந்த செல்வா, "டேய் மருது விடுடா அவனை..."என்றவாறு பிரகாஷை அவனிடம் இருந்து விளக்கினான்.
"டேய் ஏன்டா அவனை போட்டு அடிக்கிற அப்படி என்னடா கோபம் உனக்கு..?"
"பின்ன என்ன செல்வா நானே கோபத்துல இருக்கேன் இவன் என்னடானா நான் சொன்னதே எனக்கே சொல்லுறான்..."
"அவன் ஏதோ தெரியமா சொல்லிருப்பான் விடுடா. என்னை எதுக்கு இப்போ போன் பண்ணி வரச் சொன்னே அவசரமா..."
பிரகாஷின் அருகில் அமர்ந்த மருது, "சாரிடா மாப்பிள கோபத்துல அடிச்சிட்டேன்..." என்க,
"பரவாயில்லடா மச்சான் உன்னை பத்தி எனக்கு தெரியாதா..."என்றவாறு அவன் தோளில் கையை போட்டான்.
இவர்கள் இருவரையும் பார்த்தவாறு எதிரில் அமர்ந்திருந்த செல்வா, "எதுக்குடா வர சொன்னே..?" என்று மறுபடியும் கேட்க, வரச் சொன்னதுக்கான காரணத்தை கூற ஆரம்பித்தான்.
ESTÁS LEYENDO
உன் அன்பில் உன் அணைப்பில்..!
No Ficciónஇது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.