அத்தியாயம் 30

2.8K 181 65
                                    

சிவநாதனின் வார்த்தைகளை கேட்ட ஆராதனா அப்படியே நிற்க தன் முன்னால் நிற்கும் ஆராதனாவை பார்த்த வேல்முருகன், " என்னமா..."என்றார் .

"உங்க எல்லாரையும் சாமி கும்மிட வரச் சொன்னாங்க..."என கூறியவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக திரும்பிச் சென்றாள்.

அனைவரும் சாமி கும்மிட ஆராதனாவின் முகத்தை பார்த்த சக்தி ஏதோ தோன்ற தேன்மொழியிடம், "அம்மு ஏன் ஒரு மாதிரியா அமைதியா இருக்கா தேன்மொழி..."என்று மெதுவாக கேட்க ,

"அப்படியெல்லாம் இல்லியே நல்லா தான் பேசுனா அவ நல்லா தான் இருக்கா நாம்ம இப்போ சாமி கும்மிட தானே வந்தோம் நீ முதல அதை பாரு அத்தான்..."என்று ரஞ்சித் அங்கே இல்லாத கடுப்பில் சக்தியிடம் கூறினாள் தேன்மொழி.

அதே நேரம் நந்தினியின் கண்கள் யாரையோ தேட பின் முகம் சுருங்க மனதில் ஏதோ ஒரு வித கவலையுடன் தன் மனைவி அமைதியாக இருப்பதை கண்டான் தமிழரசு.

சாமி கும்மிட்டு முடித்து முளைப்பாரிக்கு தேவையானதை முடித்துவிட்டு இருட்ட தொடங்க வீடு வந்து சேர்ந்தனர்.

சாப்பிட்டு முடித்து அவரவர் அறைக்குச் செல்ல நந்தினியை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு அவளது கவலையை அறிய முயன்றான் தமிழரசு.

"என்னாச்சும்மா ஏன் ஒரு மாதிரியா இருக்கே யாரையோ கோவில வைச்சி தேடுனையே அவங்களை பார்க்கலைன்னு கவலைப்படுறையா..?"

"என்னங்க எனக்கு சித்தியையும்,ரஞ்சித்தையும் பார்க்கணும் ஆசையா இருந்தது. அவங்க கோவிலுக்கு வருவாங்கன்னு நினைச்சேன் ஆனா அவங்க ரெண்டு பேரும் வரல.."என்று கண் கலங்கியவாறு கூறினாள் நந்தினி.

"இப்போ எதுக்கு அழகுற நந்தினி உனக்கு அவங்கள பார்க்கணும் அவ்வளோ தானே நாளைக்கு நானே அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்...."என்க,

"இல்லங்க அது வந்து மாமாக்கு,சித்தப்பாக்கு தெரிஞ்சா கோபப்படுவாங்க அவங்க கோவிலுக்கு வரும் போது நானே பார்த்துக்குறேன்..."

உன் அன்பில் உன் அணைப்பில்..!Où les histoires vivent. Découvrez maintenant