அத்தியாயம் 37

2.6K 198 87
                                    

தேன்மொழியின் வீட்டின் முன் இறங்கிய சக்தி ஸ்டிக்கின் உதவியுடன், "தேன்மொழி..! தேன்மொழி..!" என அழைத்தவாறு வீட்டுக்குள் நுழைந்தான்.

ஹாலில் அமர்ந்திருந்த வேல்முருகன் சக்தியை கண்டதும், "வாப்பா சக்தி..." என்று வரவேற்க, "மாமா தேன்மொழி எங்கே அவ ஏன் போன் பண்ணுனா எடுக்க மாட்டிங்கிறா...?"வேகமாய் கேட்டான்.

"அவ ரூம்ல தான் இருக்கா சக்தி..."என்றதும் சந்தேகமாக தன் மாமாவை கண்டவன், "ஆமா ஏன் மாமா வீட்டுல யாரையும் காணும் எல்லாரும் எங்க போனாங்க...?" என்க,

"நந்தினியோட பெரியம்மா பையனுக்கு கல்யாணம் அதான் எல்லாரும் அங்கே போயிருக்காங்க நீ முதல உட்காரு சக்தி..?"

"இல்ல பரவாயில்லை இருக்கட்டும். நான் தேன்மொழி கிட்ட பேசணும் அவளை வரச் சொல்லுங்க மாமா..?"

"எதுக்குப்பா. அவ தூங்கிட்டு இருக்கா அவ கிட்ட என்ன பேசணும்..?"

ஏனோ தான் வந்ததுலிருந்து இவர் தன்னிடம் எதையோ மறைக்கிறார் என்று உள்மனம் கூற, "தேன்மொழி..!தேன்மொழி..!"என உரைக்க கத்த,

"இங்கே பாரு சக்தி எதுக்கு இப்படி கத்தி கூச்சல் போடுறே...?"என்று கோவமாக வினவினார்.

"மாமா தேன்மொழியை என்ன பண்ணுனீங்க. அவ ஏன் என்னை பார்க்க வரல...?"

"அவ ஏன்டா உன்னை பார்க்க வரணும். அதான் அவளை கல்யாணம் பண்ண மாட்டேன்ணு சொல்லிட்டேல அப்பறம் எதுக்குடா அவளை பத்தி கேட்குற...?"என கோபமாக கத்தினார்.

"மாமா நீங்க ரொம்ப பெரிய தப்பு பண்ணுறீங்க. அன்னைக்கு கோவில வச்சி எனக்கு ரஞ்சித்துக்கும் சண்டைக்கு காரணமாக இருந்தீங்க. அப்பறம் அப்பாவை ரஞ்சித்துக்கு பகையை மாத்திருக்கீங்க. இப்போ தேன்மொழியை எங்கேன்னு சொல்ல மாட்டிக்கீங்க...?"

"நான் எந்த தப்பும் பண்ணல எல்லாம் நல்லதுக்கு தான் பண்ணுனேன். அப்பறம் தேன்மொழி என் பொண்ணு நீ கவலைப்பட தேவையில்லை.."என கூறி கொண்டிருக்கும் போதே,

"அத்தான்..."என்று தன் பின்னால் ஒலிக்கும் மகளின் குரலில் நிறுத்தினார் வேல்முருகன்.

உன் அன்பில் உன் அணைப்பில்..!Where stories live. Discover now