அத்தியாயம் 12

3.1K 180 55
                                    

கண் கலங்கியவாறு தன் தாயிடம் பேசி கொண்டு இருந்த கணக்குப்பிள்ளையை பார்த்தவாறு வீட்டுக்குள் நுழைந்தான் ரஞ்சித் குமார்.

"என்ன பிரச்சனை என்னாச்சு கணக்குப்பிள்ளை..?"

"அது வந்து தம்பி..." தயங்கிவாறு கண் கலங்க,

"ஐயோ எதுக்கு கண் கலங்குறீங்க என்ன பிரச்சனை சொல்லுங்க..."என்றவாறு அவர் கைகளை பிடித்து ஆறுதல் கூறினான்.

"எல்லாம் என் பையனால தான்பா உனக்கு தான் அவனை தெரியும்ல..."

"ஆமா சுந்தர் இப்போ ரெண்டு வருஷம் முன்னாடி தானே காலேஜ் படிச்சி முடிச்சான் நீங்க கூட ஒரு வேலை வாங்கி தர சொன்னீங்களே நான் கூட வாங்கி கொடுத்தேனே...."

"வேலைக்கு போகச் சொன்னா போக மாட்டிக்கிறான் தம்பி குடிக்க ஆரம்பிடிச்சிட்டான். ஒரே குடி தான் ரொம்ப கவலையா இருக்கு தம்பி...."

"என்னாச்சு அவனுக்கு...?"

"ஏதோ காலேஜ் படிக்கும் போது ஒரு பொண்ண லவ் பண்ணுனான் யாரு அந்த பொண்ணு கேட்டா அமைதியா இருக்கான் எதுவும் சொன்னா தானே தெரியும் ஒன்னும் சொல்ல மாட்டிக்கிறான்..."

லட்சுமி வந்து தண்ணீர் தர அதனை வாங்கி குடித்தவர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

"நான் அந்த பொண்ணுக்கே அவனை கல்யாணம் பண்ணி வைக்குறேன் தம்பி. நீ என் பையன் கிட்ட கொஞ்சம் பேசுறீயா..?"

"கண்டிப்பா பேசுறேன் நீங்க கவலைப்படாதீங்க நான் பார்த்துகிறேன்..." ஆறுதல் கூறினான் ரஞ்சித்.

"சரிங்க தம்பி நான் போய்ட்டு வரேன்..."

"வாங்க நானே வந்து வீட்டுல விடுறேன்..."

"இல்லை பரவாயில்லைப்பா நானே போயிறேன் எல்லாம் என்னோட நேரம்..."என கூறியவாறு சென்றார்.

"பாட்டி,மாமா,அத்தான் சாப்பிட வாங்க எல்லாரும் சாப்பாடு எடுத்து வச்சாச்சி சூட இருக்கு சீக்கிரம் வாங்க...."என அந்த வீடே அதிரும் அளவுக்கு கத்தினாள் தேன்மொழி.

உன் அன்பில் உன் அணைப்பில்..!Donde viven las historias. Descúbrelo ahora