அத்தியாயம் 33

2.5K 181 64
                                    

திருவிழா முடிந்து ஒவ்வொரு வீட்டிற்கும் வந்த விருந்தாளிகள் செல்ல மறுநாள் சக்தியின் வீட்டிலும்,ஆராதனாவின் வீட்டிலும் அனைவரும் செல்ல இருப்பதால் அன்று இரவு தன் தோழன் வாசுதேவனும் மற்றும் அவரது குடும்பத்தையும் விருந்திற்கு அழைத்தார் சிவநாதன்.


இதில் வேல்முருகனுக்கு விருப்பம் இல்லையென்றாலும் தன் தங்கையின் கணவன் சிவநாதனுக்காக அமைதியாக இருந்தார்.

ஆராதனாவின் குடும்பத்தில் அனைவரும் வர ஹாலில் அமர்ந்து சந்தோஷமாக பேசக் கொண்டிருக்க சக்தியின் கண்களோ ஆராதனாவையே சுற்றி சுற்றி வந்தது.

அதன் பின் அனைவரும் சாப்பிட அமர பார்வதியும்,வள்ளியும் உணவு பரிமாறிவிட்டு அவர்களும் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.

சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே திடீரெண்டு கரெண்ட் கட்டாக தமிழரசும்,சக்தியும் மொபைலில் இருக்கும் டார்ச்சை ஆன் பண்ணினர்.

சக்தி தான் சென்று என்னவென்று பார்ப்பதாக கூற தமிழரசும் உடன் வருவதாக சொல்ல வீட்டின் பின்புறம் மீட்டர் பெட்டி(கரெண்ட் மெயின் பாக்ஸ்) இருக்கும் இடம் நோக்கிச் சென்றனர்.

சக்தி கரெண்ட் வயரை தொடும் நேரம் தேன்மொழி இருவரையும் அழைத்தாள்.

"என்னாச்சு தேன்மொழி..."என்று திரும்பிய இருவரும் அவளிடம் கேட்க, "நாம்ம எல்லாரும் மொட்டை மாடிக்கு போகலாம் கரெண்ட் வரும் போது வரட்டும் வாங்க போகலாம்.." என்றாள்.

"ம்ம்ம் சரி.தேன்மொழி சொல்லுறதும் நல்ல ஐடியா தான் வா சக்தி போகலாம்..."எனக் கூறிய தமிழரசு முன்னேச் சென்றான்.

சக்தி திரும்பி அந்த மெயின் பாக்ஸ் பார்க்க அதில் சற்று வித்தியாசம் தெரிய தேன்மொழி அழைக்கும் குரலில் அதை மறந்து வீட்டுக்குள் சென்றான்.

அதன் பின் அனைவரும் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் செல்ல பௌணர்மி வெளிச்சத்தில் பாயை விரித்து அமர்ந்தனர்.

சிறுவர்கள் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்க ஆராதனாவும் அவர்களுடன் விளையாட ஆராதானவை கண்ட வேல்முருகன் திரும்பி வாசுதேவனிடம் பேச ஆரம்பித்தார்.

"என்ன வாசுதேவா, உன் பொண்ணுக்கு மாப்பிள்ளை எதுவும் பார்க்கலையா..?" என்க,

"பார்க்கணும். நம்ம சொந்தத்துல யாராவது இங்கே பக்கத்துல இருந்தா சொல்லுங்க அண்ணா,அப்பா அம்மாக்கு அவ இங்கையே இருந்தா கொஞ்சம் வசதியா இருக்கும்..."

"நீ சொல்லுறது சரி தான் வாசுதேவா இந்த பிள்ளையாவது எங்க பக்கத்துலே இருக்கட்டும்.."என்று மரகதவள்ளி பாட்டியும் கூறினார்.

சக்தியும்,ஆராதனாவும் அதை கேட்டு மனதிற்குள் சந்தோஷத்துடன் அமைதியாகவே இருந்தனர்.

அனைவரும் தொழில்,குடும்பம் என சிரித்து பேசி கொண்டிருக்க அதை கண்ட தேன்மொழி, "இந்த நேரம் ரஞ்சித்தும்,வாசுகி அத்தையும் நம்ம கூட எவ்வளோ நல்லாயிருக்கும்..."என நினைத்தாள்.

மனதிற்குள் இப்போதே ரஞ்சித்தை காண வேண்டுமென ஏங்க சிறிது நேரத்தில் வருவதாக பார்வதியிடம் கூறி கொண்டு கீழேச் சென்றாள் தேன்மொழி.

கீழே வந்தவளோ தன் மொபைலை எடுத்து கொண்டு யாருக்கும் தெரியாமல் ரஞ்சித்தின் வீட்டுக்கே சென்றாள்.

தன்னவன் வீட்டு வரை வந்தவளுக்கு உள்ளே செல்ல தடுமாற தன் மொபைலில் அவனை அழைத்தாள்.

உன் அன்பில் உன் அணைப்பில்..!Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ