அத்தியாயம் 41

3.4K 215 82
                                    

சுந்தர் மற்றும் சக்தியின் செயலால் தன் அறையே வண்ண மலர்களால் அலகரிக்கப்பட்டு இருப்பதை ரஞ்சித் பார்த்துக் கொண்டிருக்க மெல்லிய கொலுசொலி ஓசையில் திரும்பினான்.

பொன்னிற ஒளியில் பொன்னிறமாய் காட்ட முகத்தில் வெட்க பூக்கள் படர்ந்திருக்க,கையில் பால் செம்புடன் தரையை பார்த்தவாறு நடந்து வந்தாள் தேன்மொழி.

கையில் அணிந்திருந்த வளையல் அவள் நடைக்கு ஏற்றவாறு கொலுசொலியுடன் சேர்ந்து போட்டி போட்டு ஓசை எழுப்ப புது மஞ்சள் கயிறு கழுத்தில் மின்ன,அவள் நெற்றி வகிட்டில் வைத்த பொட்டு அவளுக்கு மேலும் அழகு சேர்க்க, மெல்ல நடந்து வந்த தன் மனைவியை இமைக்க மறந்து ரசித்துக் கொண்டிருந்தான் ரஞ்சித்குமார்.

தான் அவளை ரசிப்பதில் பொன்னிற முகம் மேலும் சிவக்க அவள் பதட்டத்தை உணர்ந்தவன் மெல்ல அவள் அருகில் சென்று கையில் வைத்திருந்த பால் செம்பினை வாங்கி அருகில் உள்ள டேபிளிலில் வைத்து ஆதரவாக நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

"இப்போ எப்படி இருக்கே தேனு..?"என்று தன்னவள் கூந்தலை வருடியவாறு கேட்க,அவனது அழுத்தமான,அன்பான தேனு என்ற அழைப்பிலும் அவன் காட்டிய அணைப்பிலும் மொத்தமாக கரைந்து அவன் நெஞ்சொடு சேர்ந்து ஒட்டி கொண்டாள்.

அவளது இந்த செய்கையிலே ரஞ்சித்தின் மனம் குளிர தேன்மொழியை அணைத்தவாறு வந்து கட்டிலில் அமர வைத்தான்.

அவள் முகத்தை இரு கைகளிலும் ஏந்தி தீராக் காதலால் அவள் செய்த செயலை நினைத்து அவள் கருவிழிகளை காண, "ரொம்ப சந்தோஷமாக இருக்கேன் மாமா. உங்களோட இந்த அன்பு எனக்கு எப்பவும் வேணும். ஒவ்வொரு நொடியும் நான் உங்க கூடவே இருக்கணும். எனக்கு நீ மட்டும் போதும் மாமா..."என்றவாறு அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

"என்னோட அன்பு மட்டும் போதுமா வேற எதுவும் வேண்டாமா இப்போ..."கொஞ்சலுடன் அவள் மேல் கைகளை படர விட்டவாறு கேட்டான்.

தன் மேனியில் எல்லை மீறும் அவன் பரிசத்தால் அது தந்த வெம்மையில் நெஞ்சில் வைத்திருந்த முகத்தை இன்னும் அவனோடு சேர்ந்து அழுத்தினாள்.

உன் அன்பில் உன் அணைப்பில்..!Donde viven las historias. Descúbrelo ahora