கீழே வந்த இருவரையும் கண்ட வாசுகி சந்தோஷமாக, "வாம்மா வந்து பூஜை ரூம்ல விளக்கேத்து..."என்றவாறு தேன்மொழி அழைத்துச் சென்று விளக்கேற்ற வைத்தார்.
அதன் பின் அனைவரும் டைனிங் டேபிள்லில் சாப்பிட அமர, "அத்தை பாட்டி எங்கே..?"என்று தேன்மொழி கேட்க,
"அத்தை ரூம்ல இருக்காங்க..."என்று கூறி முடிப்பதற்குள் மரகதவள்ளி பாட்டி வருவதை கண்டனர்.
மரகதவள்ளி பாட்டியை பார்த்ததும் தேன்மொழி கட்டிக் கொள்ள அவளது சந்தோஷத்தை கண்ட அனைவரும் மகிழ்ந்தனர்.
அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண தேன்மொழிக்கு மரகதவள்ளி பாட்டி அறிவுரை வழங்க அதை கேட்டாலும் சில நேரங்களில் அவள் குடும்பத்தை நினைத்து வருந்துவதை உணர்ந்தான் ரஞ்சித்குமார்.
அதே நேரம் இங்க சக்தியை போன் செய்து வரக் கூறிய ஆராதனா ஆற்றங்கரையில் அவனுக்காக காத்திருந்தாள்.
"என்ன அம்மு என்னை பார்க்காம இருக்க முடியலையா..?காலைலே போன் பண்ணி வரச் சொல்லுற..?அவ்வளோ ஆசையா என்மேல..?"என்றவாறு வந்தவன் அவள் இடையில் கைவைத்து தன் அருகில் இழுத்து அணைத்தான்.
"முதல என்னை விடு சக்தி..."என்றவாறு கோபமாக அவனை விட்டு விலக்க,.
"என்னாச்சு அம்மு,ஏன் கோபப்படுற..?என்ன பிரச்சனைன்னு சொல்லு...?"சற்று பொறுமையாக கேட்க,
"நாளைக்கு எங்க அம்மாவும்,அப்பாவும் வராங்க..."
"என்ன திடீருன்னு சொல்லவே இல்ல. நான் போய் கூப்பிட்டு வரணுமா..?"
"சக்தி எங்க அப்பா கிட்ட நான் இதுவரைக்கும் எதையும் மறைச்சது இல்ல. முதல் முறையா நம்ம விரும்பிறத மறைச்சுட்டேன். நான் தப்பு பண்ணுற மாதிரியே தோணுது. அன்னைக்கு திருவிழாக்கு வந்த போது என் அப்பா முன்னாடி என்னால நிக்க முடியல. அவர் என் மேல ரொம்ப நம்பிக்கை வைச்சிருக்காரு அதை நான் பொய்யாக்குறேன். ரொம்ப கஷ்டமாயிருக்கு சக்தி..." அழுகையுடன் கூற,
அவளை அழைத்து வந்து அருகில் இருந்த கல்லில் அமர வைத்தவன், "அம்மு என்னடா இதுக்கு போய் அழுகுறே..? மாமா கிட்ட போய் சொல்லு நம்ம விரும்பிறது ரெண்டு பேரு வீட்டுலையும் சொன்னா அவங்க எல்லாரும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க..."ஆறுதலாய் கூறினான் சக்திவேல்.
![](https://img.wattpad.com/cover/123464071-288-k297950.jpg)
YOU ARE READING
உன் அன்பில் உன் அணைப்பில்..!
Non-Fictionஇது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.